பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 281


என்று கருதி நீண்ட தூரத்தில் காணும் போழ்தே உன்னைக் காப்பாற்றிக் கொள் என்று திருவள்ளுவர் வலியுறுத்து கின்றார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் கருத்து நடைமுறைக்கு வரவில்லை. எல்லார்க்கும் வாய் இருக்கிறது. எல்லாரும் பேசலாம் என்று பேசுகின்றார்கள். பொய்க்குப் புனைந்த வடிவம் கொடுத்து மெய்யாக்கு கின்றார்கள். பொழுது போகாதவர்கள், உழைத்து வாழும் அவசியம் இல்லாதவர்கள், தற்பெருமையில் களிக்கும் செல்வந்தர்கள், போக்கிரிகள் இன்றும் பயனில சொற்களைச் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கின் றார்கள். இந்தச் சூழ்நிலையில் எங்ங்னம் மனிதகுலம் ஆற்றல் நிறைந்த முயற்சிகளில் ஈடுபட முடியும்? எப்படி, அவர் களிடையே நம்பிக்கையுணர்வு வளர முடியும்? சிந்தனை செய்து பாருங்கள். "பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள். அது போலவே, அவற்றைக் கேட்காதீர்கள்: இம்முயற்சியால் காலத்தின் அருமை வெளிப்படும். கருத்தில் தெளிவு ஏற்படும். நம்பிக்கை வளரும். நாடு செழிக்கும். மீண்டும் ஒரு தடவை அக்குறட்பாவைப் படித்து, நினைத்து அன்றாட வாழ்க்கைக்கு உரியதாக்கிக் கொள்ள முயற்சி செய்வோமாக.

"நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை." (193)


தீயும் தீவினையும்


ற்காத்துக் கொள்ளுதல் என்பது இயல்பான உயிரியல் உணர்வு. உயிர்வர்க்கம் எல்லாமே தம்மைத் துன்பத்தினின்றும் மரணத்தினின்றும் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றன - முயற்சி செய்கின்றன. விலங்கியலில் உயிர் அறிவும் உணர்வும் மிகமிகக் குறைவு. மனித இயலிலும் உடலியலை விட உயிர் உணர்வும் அறிவுமே