பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


-- வந்துற்றபோது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்ட காலம். இன்றோ பொருள் பெரிதாகி, ஈர நெஞ்சின்றி இவறிக் கூட்டிப் பொருள் சேர்க்கும் காலம், இந்தக் காலத்தில் இரப்போர் - நிலை இரங்கத்தக்கதாக உள்ளது. முழங்கால் கடுக்க முயன்று ஏறி “முதலாளி" என்றாலும் காசு தராமல் “உடம்பு சரியில்லையா?” என்று கேட்கும் காலம். ஆதலின் இரப்போர் தொகை குறைவதே நல்லது. எனினும் உதவி, சேவைகளின் மூலம்தான் மனித உயிர்கள் வளர்ச்சியடைய முடியும்.

ஆதலால், இரப்பார் நிலையில் உள்ளார் இரக்காமலேயே வலியச் சென்று கொடுப்பது -- அல்லது வாழ்விப்பது நலம் தரும். அத்தகு சமுதாயப் பணிமனைகள் நாடு முழுவதும் பெருக வேண்டும். இக் கருத்திலேயும் வள்ளுவர் கூறி உள்ளார்.

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
'குலனுடையான் கண்ணே யுள." (223)

என்ற குறள் இக் குறிப்பினதே யாகும்.

ஈதலும் இரத்தலும்

னித குலம் பலவகையாலும் நெருங்கிய தொடர்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழக்கூடியதே வாகும். அறம் விளக்கும் அறநூல்களும், ஒழுக்க நூல்களும், சமய நூல்களும் ஒருமுகமாக, ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. தமிழ் இலக்கியங்கள் கூட ஈதலின் சிறப்பைப் பேசுகின்றன. காதலின்பத்தைவிட ஈதலால் பெறுகின்ற இன்பம் பெரிது என்பது தமிழர் கருத்து. ஈந்து வாழ முடியாத வாழ்க்கை மரணத்திலும் கொடுமையானது என்பது திருவள்ளுவர் கருத்து.