பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




1

திருக்குறள் பேரவை
வெள்ளை அறிக்கை

தி.பி. 2021,வைகாசி,5 (19.5.1990), சென்னை

திருக்குறள் தோன்றிய காலத்தில் மானிட உலகம் முடியாட்சியின் கீழ் அமைந்திருந்தது. ஆனால் மக்கள்நலந் தழீஇய முடியாட்சிகளாக இல்லாமல் கொடிய கொடுங் கோலாட்சிகளாகவே அமைந்திருந்தன. ஆயினும் தமிழகத்தில் மட்டும் கொடுங்கோலாட்சியாக அமையாமல் ஓரளவு மக்களுக்கு நலம் பயக்கும் ஆட்சியாக அமைந்து விளங்கியது. அதனால்தான் தமிழகத்தில் இங்கிலாந்தில் நடந்த புரட்சி போலவோ, பிரெஞ்சுப் புரட்சி போலவோ உண்டாகவில்லை. அதனால்தான் சமுதாய நலம் தழீஇய, அரசியற் சிந்தனை சார்ந்த வாழ்வியலை விளக்கும் திருக்குறள் தமிழகத்தில் தோன்றியது.

திருக்குறள் நெறியில் மாந்தர் ஒரு குலம். இனம், மொழி, சமயம், சாதி, நாடு வேறுபாடுகளற்ற ஒரு குல அமைப்பே இது. நாட்டுப்பற்றுக் கூடத் தன்னாட்டு வளர்ச்சியை மையமாகக் கொண்ட அளவுக்குட்பட்டதுதான். நாட்டுப் பற்றின் காரணமாக ஒரு நாடு பிறிதொரு நாட்டுடன் போராடுதல், அழித்தல் முதலிய கொடிய போர்க்களங்