பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 311


பிறரை வாழ்வித்துத் தான் வறியவராக வாழ்தலே தவத்திற்கு அழகு. இக்கருத்தினை அப்பரடிகள், "கந்தை மிகையாம் கருத்தும்" என்று பேசுகின்றார். இதனைச் சேக்கிழார் அடிகளும்,

"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கடும் அன்பினில் கும்பிடலே யன்றி
விடும் வேண்டார் விரலின் விளங்கினார்."

என்றும், அடுத்து,

ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே
பாரம் ஈசன் பணியலா தொன்றில்லை

என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆதலால், தவத்தினை மேற்கொண்டவர்களாவது தமக்குக் கிடைத்த செல்வத்தைப் பிறருக்கு வழங்கி மற்றவர்தம் வறுமையை மாற்றி - அல்லல் நீக்கி - அவலம் போக்க சிவ சிந்தனையில் ஈடுபட வேண்டியது அவசியம். எனவே, இவ்வுரை முற்றிலும் பொருந்துவதேயாகும்.

மழித்தலும் நீட்டலும்!

தவம் ஒரு சோதனைப்பட்டறை. பட்டறையில் இடப்பட்ட பொன் துய்மை பெற்று ஒளிர்தல் போல, தவத்தில் ஈடுபட்டோர் துன்பங்களால் தூய்மைப்படுத்தப் பெற்று, ஒளி பெற்றுத் திகழ்தல் வேண்டும். துன்பம், இருவகையது. ஒன்று உடல்வழி வரும் பசி, நோய் முதலியன. பிறிதொன்று உயிர்வழி விருப்பு வெறுப்புக்களால் வரும் உணர்வுகள் ஆசைகள் முதலியன. இவ்விருவகைத் துன்பங்களையுமே கவலையின்றி, மகிழ்வுடன் ஏற்று அனுபவித்துத் திருவருளை நினைந்து வாழ்தல் தவம். அதனாலன்றோ திருவள்ளுவர், "உற்ற நோய் நோன்றல்,