பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்க் குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு" என்று தெளிவாகத் தேற்றேகாரம் போட்டு அறிவுறுத்தினார். உற்ற நோய் நோற்றல் முதல் வகை. அந் நோயிலிருந்து விடுவித்துக் கொள்ள விரும்புதலும் விருப்பம், முயற்சி ஆகியவற்றின் காரணமாகப் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் பிறிதொரு வகை.

தவம் செய்யும் ஒரு பழக்கம் உடற் பழக்கம் - உயிர்ப் பழக்கமும்கூட உடலையும், உள்ளத்தையும் முறைப்படி பழக்குதல் எளிதன்று. கிண்ணத்தில் தண்ணிரை நிரப்பி எடுத்துக் கொண்டு ஓடுவதுபோல, கிண்ணம் ஆடினாலும் தண்ணிரும் அலையும்; வெளியே சிந்தும். தண்ணிர் அலைந்தாலும் கிண்ணம் ஒரோ வழி ஆடும். ஓடுவதோ ஓட்டம். இந்த அமைப்பில் ஓடவும் வேண்டும். கிண்ணத்தை. ஆடாமல் பாதுகாக்கவும் வேண்டும். அதனுள் இருக்கும் தண்ணிர் அலைந்து வழியாமல் பாதுகாக்கவும் வேண்டும். இத்தகையத்ே தவம் செய்யும் முயற்சி. நாம் வாழும் உலகியல் ஆசைகளால் நிறைந்து அலைவது. இதில் உடலையும் உயிரையும் ஒருங்கே பாதுகாக்க வேண்டும். உடல் கெட்டாலும் உயிர் கெடும் - உயிர் உணர்வு கெட்டாலும் உடல்கெடும். ஆதலால், உடலை, உயிர்நிலைப் பாதுகாப்பு என்று கருதுவதில் தவறில்லை. உடல்நிலை உயிர் உணர்ச்சி களைத் தோற்றுவிக்கும் நிலைக்களன். உடலியற் கூறுகளுக்கு ஏற்றவாறு, உயிர் உணர்ச்சிகள் தோன்றும் - வளரும். அதனாலன்றோ தவம் செய்வோர் உடல், ஆசைகளைத் தோற்றுவிக்கும் நிலைக்களனாக விளங்குவதை விரும்புவதில்லை.

ஆதலால், உடலைத் தவத்தால் வருத்துவர். உடல் அழகினைக் கெடுத்துக் கொள்வர். இவ்வழித் தோன்றியதே மழித்தலும், நீட்டலும் ஆகிய செய்முறை. ஒரோ வழி