பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தொடக்கம் அன்பு, அருள், துறவு ஆகியவைகளின் வழியதாகத் தோன்றிய பொதுமக்களின் நம்பிக்கை காலப்போக்கில் இது தலைகீழ்ப் பாடமாகி வரலாறு கறைபடுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்படி ஒரு நிறுவனம் தோன்றியது. தோன்றுதற்குக் காரணமாக இருந்தவர் தமது கடைசிக் காலத்தில், அந்நிறுவனத்தைத் தம்முடைய நெருங்கிய உறவினர் ஒருவருக்கு (கொள்கைவழி உறவல்ல - குருதிவழி உறவு) எழுதி வைத்துவிட்டார். அறநிலையங்களின் அடிப்படை நம்பிக்கையேயாகும். ஆதலால் துறவு வழியில் பொருள் சேரும். அங்ங்னம், சேர்வதியற்கை. அங்ங்ணம் சேர்ந்த பொருளை அதாவது, பிறர் நலனுக்காகத் தம்மிடம் விடப்பெற்றிருக்கும் பொருளைத் தமக்காக்கிக் கொள்ளுகின்ற கீழ்மையைத் துறவற இயலில் 'கள்ளாமை' என்ற அதிகாரத்தின் மூலம் கடிந்துரைக்கின்றது திருக்குறள்.

பாபிலோனியாவில் ஓர் அரிய அனுபவ வாக்கு உண்டு. “எவனொருவன் தன்னுடையதை உன்னுடைய தென்றும், உன்னுடையதை உன்னுடையதே என்றும் கூறுகின்றானோ அவன் சாது; எவனொருவன் தன்னுடையதாகத் தன்னுடையது என்றும், பிறருடையதைத் தன்னுடையது என்றும் கூறுகின்றானோ அவன் இழிந்தவன்” என்பதே அந்த அனுபவ வாக்கு. அதனால்தான் தமிழகத் திருமடங்களின் தலைவர்கள் பலகாலும் 'நாம்' என்றும், 'நம்முடையது' என்றும் வழங்கி வருகின்றனர் போலும்! இச்சொல் வழக்கு பொருள் விளக்கமாக வளர்ந்து, வாழ்க்கையில் பொதுளின் பெரும்பயன் விளையும். ஆதலால், துறவற இயலில் கள்ளாமை அதிகார இயல்பு இயல்புடையதேயாகும்.

"அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் கனவின்கண்
கன்றிய காத லவர்."

(286)

என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது. முன்னர் விளக்கியுள்ளது போல, பொருள் வரலாம். அங்ஙனம் வருவது