பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 319


துறவிகளின் நலன் கருதி மட்டுமல்ல - பலர் நலன் கருதியேயாகும். ஆயினும், பலர் நலன் கருதிப் பொதுப் பணி ஆற்றுவோருக்கும் துறவுநெறி மேற்கொண்டோருக்கும்கூட வாழ்க்கையுண்டு - அவர்களுக்கும் தேவை யுண்டு. அத்தேவையை அவர்கள் அளவோடு அடைந்து அநுபவித்தல் தவறன்று. அங்ங்ணமின்றிப் பொதுப் பணியின் பேரால் துறவு நிலையை முதலாகக் கொண்டு தோன்றிய பொருளைத் தவறான வழிகளிலும், தேவையற்ற ஆடம்பரங்களிலும் செலவழித்துத் துய்த்தலும் - அனுபவித் தலும், அவ்வழி அச்சம் தோன்றுதலால் தன்னலம் கருதித் தனி நிதி சேர்த்து வைத்துக் கொள்ளுதலும் களவேயாகும். ஆதலால், பெரும் பொருள் தேட வேண்டும் - அனுபவிக்க வேண்டும், என்ற விருப்பத்தோடு "தவம் மறைந்து அல்லவை செய்வார் அளவின்கண் நின்றொழுகார்". தம்முடைய வாழ்க்கைக்குத் தேவைகளை எளிய முறையில், அளவுக்கு உட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அளவிறந்த ஆடை ஆபரணங்கள் சுகபோக வசதிகள் ஆகியவற்றில் வாழ் வார்கள். அவர்கள் மகிழ்வார்கள். ஆனால் அந்தப் பொருளின் தோற்றம் அவர்கள் மகிழ்தற்கல்ல - பிறரை மகிழ்வித்து வாழ. பிறரை மகிழ்விக்கத் தோன்றிய பொருளில் தாம் மகிழ்தல் துறவின்பாற்பட்டதன்று. இதனையே திருக்குறள் வலியுறுத்துகின்றது.

அறிவிற்குப்பயன்

னித வாழ்வுக்கு அறிவு இன்றியமையாத ஒன்று. வாழ்க்கையை நல்வழிப்படுத்துவது அறிவு. குழப்பத்தி னின்றும் தெளிவு தருவது அறிவு. வாழ்வுக்கு ஆக்கம் தருவது அறிவு. வையத்துள் வாழ்வாங்கு வாழ வழி காட்டுவது அறிவு. அதனாலன்றோ திருவள்ளுவர் "அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று கூறினார். திருவள்ளுவர் அறிவு பெறும் முயற்சிகளைப் பலபடக் கூறுகின்றார். கற்க வேண்டுமென்று