பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வற்புறுத்துகின்றார். கற்க வாய்ப்பில்லாதவர்களுக்குக் கற்றிலராயினும் கேட்கவென்று அறிவுறுத்துகின்றார். இத்தகு அறிவு முயற்சி மானிட சாதியில் வளர்ந்து வந்திருக்கின்றது. இன்னமும் வளரும். இங்ங்னமெல்லாம் மானிடர் அறிவில் முயன்று அறிவு பெறுவது எதற்காக? ஏன்? என்ற கேள்விகள் கேட்கப்படாமலில்லை. அறிவு ஆராய்ச்சிக்காக மட்டும் தானா? அல்லது குற்றங்களே காணும் ஆராய்ச்சிக்காகவா? அதிலும், விவாதத்திற்காகத்தானா? அல்லது புலமைக் காச்சலில் சிக்கித் தவிப்பதற்காகவா? அல்லது குறைந்த நேரத்தில் எவ்வளவு அதிகப்படியான மக்களைக் கொன்று குவிக்கலாம் என்ற ஆராய்ச்சிக்காகவா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. ஆம், இன்றைய உலகப்போக்கைக் கவனிக்குமிடத்து வேறு என்ன சொல்லமுடியும்?

ஆனால் பண்பட்ட அறிவு பகைமைக்கு அப்பாற்பட்டது. விவாதத்திற்குட்பட்டதல்ல. விளங்க வைக்கும் தகைமை உடையது. தண்ணளி மிக்கது. அறிவுடைமையைப் பற்றிப் பேசிய திருவள்ளுவர் அறிவினால் பெறும் பயன் பற்றியும் கூறுகின்றார். பயன்பட வாழ்தலே சிறப்புடைய தொன்று. பொருள் வேறு பயன் வேறு. அறிவுடைமை வேறு, அதன் பயன் வேறு. இந்தத் தத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளப் பெறுதல் வேண்டும். இந்திய அரசின் உறுதி முத்திரையிட்ட நாணயத்துக்குத் தனியே ஒரு மதிப்பில்லை. அந்த நாணயத்தைக் கொடுத்து அதற்கு மாறாகப் பெறக்கூடிய பொருளை வைத்துத்தான் (பண்டங்களை) நாணயத்துக்கு மதிப்பு. அது போலவே அறிவுக்கும் அறிவுடைமையின் பயனாகத் திருவள்ளுவர் காட்டுவது கருணையேயாகும்.

பழனி மலைமீது வீற்றிருந்தருளும் இறைவனை வழிபட ஒரு பக்தர் போகின்றார். அவர் செல்வமுடையவர். அவர் மலைமீது ஏறிச் செல்லும்போது படிகளின் ஓரத்தில் இருக்கும் நோய்வாய்ப்பட்டு அவதி உறுவோருக்கு அள்ளிக்