பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 329


நன்மையே பெறுமானால் அதுவே முறையென உரை கண்டவர் வள்ளுவர். வள்ளுவம் மனிதகுலத்தின் நலனையே மையம்கொண்டு கால்பரவி நிற்கிறது.

இன்று அறிவுடையோர் ஏழையாக யிருக்கலாம். எத்தனையோ எழுத்தாளர்கள் - புலமை நலம் பெற்றவர்கள் பதிப்பாளர்களின் உடும்புப் பிடியில் சிக்கி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர் சம்பாதிப்பது பல ஆயிரங்கள்! படித்தவர் சம்பாதிப்பது சில நூறுகள். இந்தக் கொடுமைக்கு இன்னும் விடுதலை வரவில்லை. ஆனால், அறிவுடையோர் எல்லாரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. எழுத்தாளரும் பதிப்பாளரும் ஒருவராகவே விளங்கும் புலமைச் சான்றோர், இன்று இல்லையா? டாக்டர் மு.வ. அவர்கள் இல்லையா? அறிவு என்றால் ஒரு காலத்தில் இலக்கியப் புலமைமட்டுமே என்ற கருத்து இருந்தது. அதுபோலவே, செல்வம் என்றால் நிலவுடைமை என்ற கருத்தேயிருந்தது. நிலவுடைமை பரம்பரையானது. நிலவுடைமைச் செல்வமுடையோர் அறிவாற்றலோ தொழில் நுட்பமோ, தொழில் திறனோ உடையவர்களாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லாம லிருந்தது. முதற்காரணம் பரம்பரை. அடுத்த காரணம் அவர்கள் உழுவோரல்லர். வேளாண்மைக் கல்வியும் திறனும் உடையோரைக்கூட நில உடைமை முறை வற்றச் சிதறடித் திருக்கிறது. அந்த யுகத்திற்கு வேண்டுமானால் பழையமுறை பொருந்தும். அறிவு என்றால் ஒருதுறை அறிவு முழு அறிவாக முடியாது. அதிலும் உடல் தேவைக்குரிய பொருள்களை ஈட்டத்தெரியாத அறிவு முழுத் தன்மை உடையதாக ஆக முடியாது. நம்முடைய மொழியும் நம்முடைய இனமும் மற்றை நாடுகளைப்போல மேலோங்கி , வளராததற்கே காரணம் அறிவும் உழைப்பும் இணைந்து செயல்படாததே யாகும். கருத்துக்கள் தோன்றியிருந்தாலும் வாழ்க்கையில் மாறுதல் இல்லை. இந்த முறைகெட்ட மரபை - அநீதியை