பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



செல்வமுடையராதல் தன் முயற்சியின்றியே பிறர் முயற்சியினாலும் ஆகமுடியும். எப்படிச் செல்வந்தர் களானோம் என்று தெரியாமலே உலகத்தில் செல்வந்தர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள். ஏன்? பரிசுச் சீட்டுக்கூட செல்வந்தன் ஆக்கிவிடுகிறதே! தெள்ளிய அறிவினைப் பெற்று அதனைச் சார திருவுடையோராகவும் ஆக முயலுவோமாக.


கசடறக் கற்க

யிர் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை இன்பம். இன்பம் நேரிடையாகக் கிடைப்பதன்று. பிறர் வாயிலாக வந்து அமைவதேயாம். இன்பத்தினை வழங்கும் ஆற்றல் நல்லறிவுக்கே உண்டு. நல்லறிவைப் பெறுதற்குச் சாதனம் கல்வி. இன்று நம்மிடையில் கல்வி வேறு, அறிவு வேறு என்ற உணர்வுகூட வளரவில்லை. கல்வி அறிவைப் பெறுதற்குரிய வாயிலேயாம். நம்முள் கற்றாரிலும் மூடர்கள் உண்டு. அவர்கள் எழுத்தெண்ணி ஒப்பிப்பர். எடுத்துக் காட்டுகள் ஏராளம் காட்டுவர். நமக்கே பிரமிப்பு ஏற்படும். ஆயினும் அண்டி நின்று பார்த்தால் கல்வியின் - கற்ற கல்வியின் அடையாளத்தைக்கூட அவர்தம் வாழ்க்கையில் பார்க்கமுடியாது. உண்ணும் உணவு செரித்துச் செங்குருதி யாதல் வேண்டும். செங்குருதி வலிமையாகப் பயன்பட வேண்டும். இதுவே உணவின் பயன். அதுபோலவே கல்வி வாழ்க்கைப் பட்டறையில் அறிவாக மாறி ஒழுக்கமாகப் பயன் தரவேண்டும். இந்தப் பரிமாற்றங்கள் நடைபெறாது போனால் கல்வியாற் பயனில்லை.

கல்வி இருதரப்படும். ஒன்று பொதுக் கல்வி. மற்றொன்று சிறப்புக் கல்வி. பொதுக் கல்வி எல்லோருக்கும் தேவையான சில பொது அறிவு தரும் செய்திகளைக் கற்றுக்