பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 343


என்கிறார். எனினும் ஊழ் வெற்றி பெற்றதாக அவர் சொல்லவில்லை. நீண்ட ஓட்டப் பந்தயத்தில் முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஓடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார்களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போகத் தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு. அதுபோலவே ஊழ் முந்தினாலும், அது மனிதனுடைய குறைவற்ற முயற்சியால் பின் தள்ளப்படுதற்குரியது - பின் தள்ள முடியும். அந்த ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும்போது,

"ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துளுற்று பவர்"

(620)

என்று குறிப்பிடுகிறார்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூவி தரும்."

(619)

"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றம் தலைப்பட்ட வர்க்கு"

(269)

என்ற குறட்பாக்கள் முயற்சியின் பேராற்றலை வலியுறுத்துகின்றனவேயன்றி ஊழே வெற்றி காணும் என்று அறுதியிட்டு உணர்த்தவில்லையே!

புராண வழி பார்த்தாலும், ஊழின் வழி ஏற்பட்ட மரணத்தை முயற்சி வழி பெற்ற நோன்பின் பயனாக வென்ற மார்க்கண்டேயன் வரலாற்றை நாம் பார்க்கிறோம்.

நிலத்தினுடைய இழுப்பாற்றல் விண்ணோக்கிச் செல்லும் பொருளை இழுத்துத் தள்ளும் வலிமையுடைய தேயாயினும். அதையும் தடுத்து நிறுத்தி வானத்தே மனிதன் மிதக்கவில்லையா? ஆதலால், ஊழின் வலியைவிட, நமது