பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 347


குற்றம் சுமந்து செல்லும்படியும் அமைச்சு அனுமதித்தலாகாது. குடிகளைக் காத்தல் என்ற குறிக்கோளை வள்ளுவத்தின் பார்வையில் முழுதும் தழுவிய அரசு தோன்றுதல் இயலுமா? நாட்டு நடப்பில் உள்ள நொய்வின் காரணமாகக் கோடனைய அரசின் பொறுப்பும் உயர்ந்திருக்கிறது.

சிறந்த அமைச்சு, குடிமக்களை மன நலத்துடனும், வளத்துடனும் பேணிப் பாதுகாக்க வேண்டும். மக்களுடைய வாழ்க்கைத் துய்ப்புக்குரிய நியாயமானவைகளை யெல்லாம் வழங்கி நல்குரவால் நலியாமல் பாதுகாக்க வேண்டும். அது மட்டுமன்று. ஒவ்வொரு மனிதனும் அளவு கடந்த ஆற்றல்களால் பெய்யப்பட்ட படைப்பின் வடிவமான மனிதனின் படைப்பாற்றலும், சக்தியும், குறையாமலும் வளர்ந்து படைப்புப் பல படைக்கும்படியும் பாதுகாக்க வேண்டும்.

அமைச்சுத் தொழில் பூண்பவர்களுக்குத் தேர்ந்த கல்வி தேவை. இயற்கை, பிறநாட்டு அரசுகள், மனிதகுலத்தின் வளர்ச்சி, வளர்ச்சியில் ஏற்படும் சிக்கல்கள் இவைக ளனைத் தையும் அவ்வப் பொழுது துறைபோகக் கற்று உணர்ந்த வரால்தான் அமைச்சுத் தொழிலைச் செம்மையாகச் செய்யமுடியும். அதிகாரம் எப்பொழுதோ உபயோகப்படுத்த வேண்டிய ஒரு சின்னமே தவிர அன்றாட வாழ்க்கையில், அது அரசால் பயன்படுத்தக்கூடிய தொன்றன்று. அப்படிப் பயன்படுத்தினாலும், அந்த அதிகாரம் காலப்போக்கில் தன்னுடைய சக்தியை இழந்துவிடும். ஆனால், சிறந்த கல்வியும் நடைமுறை அறிவும் அமைச்சுக்குத் தேவை.

அடுத்து எவ்வளவுதான் கற்றறிந்தாலும் நெஞ்சில் உறுதியில்லையானால், எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்ற முடியாது. அச்சமும் சோர்வும் குடிகொள்ளும். அறிவினால் ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு உறுதியாகச் செயற்பட