பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யில்லை; பொருள்வளம் குறைந்தது. நாள்தோறும் கணவனை இல்லில் கண்டு மகிழாத மனைவி, துன்புறுதல் இயற்கை அவளைப் பேணுவார் யார்? அவரவர்களையே பேணிக் கொள்ளுதல் அண்மைக் காலத்து வழக்கு; சமுதாயச் சீர்கேட்டில் தோன்றிய வழக்கு. ஒருவர் பிறிதொருவரைப் பேணுதலே பெருமைக்குரியது. கணவன் மனைவியைப் பேணவும்; மனைவி, கணவனைப் பேணவும் கடமையை மேற்கொள்ளுகின்றனர். அள்ளி உண்பதைவிட ஊட்டி உண்பது சுவை. எடுத்து உண்பதைவிடக் கொடுத்து உண்பது சுவை. சிரித்து மகிழ்வதைவிடச் சிரிக்கக்கண்டு மகிழ்வது சிறப்பு. தன்னையே கண்ணாடியில் கண்டு மகிழ்வதைவிடத் தன்னைக் கண்டு மகிழும் பிறிதோருயிர் நிழலாடியைக் கண்டு மகிழ்தல் மகிழ்ச்சியுளெல்லாம் தலை.

அதனாலன்றோ தமிழிலக்கிய மரபில் காதலர்ப் பிரிவு பேரிலக்கியங்களாக வடிவம் பெற்றன. "செல்லாமை உண்டேல் எனக்குரை" என்பது வள்ளுவர் கால வழக்கம். இன்றோ வையகத்தில் வழியனுப்பும் விழா நடத்துகிறார்கள்.

நில உடைமையும், உழைப்பும் பிரிக்கமுடியாத ஒன்று. தமிழ்ப் பண்பில் கணவன் மனைவி உறவு, மிகப் பழைய காலத்திலே தூய்மையானதாகக் கருதப் பெற்றது. ஒரு பிறப்பில் மட்டும் கணவன் மனைவி அல்லர். ஏழு பிறப்பிலும் கணவன் மனைவி என்பது தமிழர் கருத்து. ஒருவனுக்கே ஒருத்தி உரிமையுடையவள். அவனுக்கும் அவளுக்குமுள்ள உறவே கற்பு. அவன் கற்புடையவளாகவே இருந்தாள். இந்த அடிப்படையிலேயே இளங்கோவும் "கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி" என்று பாடுகிறார்.

தமிழ் மரபில் ஒருத்தி பலரை மணத்தலோ, ஒருத்தி பலருக்கு உரிமையாக இருத்தலோ அறவே இல்லை. பரத்தையர்கூட ஒருவனிடத்திலே இருந்தனர். மனைவியாக இல்லாத குறையே தவிர, பரத்தையரும் ஒருவனிடத்திலேயே