பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆதலால் நிலத்திற்கு நாள்தோறும் வருகின்றவனே - வந்து உழைப்பவனே நிலத்திற்கு உரிமையுடையவனாக இருக்கவேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் என்பது தெளிவாகப் பெறப்படுகிறது. ஆக உழைப்பவர்களிடத்திலேயே உற்பத்தி கேந்திரங்கள் இருக்கவேண்டுமென்ற இன்றைய சமுதாயத்தின் முற்போக்குக் கருத்து திருவள்ளுவரால் அன்றே ஏற்றுக்கொள்ளப் பெற்றிருக்கிறது. இந்தத் திருக்குறள் சிறந்த எடுத்துக்காட்டு.

"செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலத்து

இல்லாளின் ஊடி விடும்"

(1039)

என்பது குறள்.

அறம்சாரா வறுமைக்கு ஆதரவில்லை!

றுமை மிகமிகக் கொடுமையானது. "பொன் வேண்டேன் பொருள் வேண்டேன்" என்ற மாணிக்கவாசகரும்கூட நல்குரவைத் "தொல்விடம்" என்று வருணித்தார். விடத்திலும் கொடியது வறுமை. வறுமை, நலத்தினைக் கெடுக்கும்; அறிவைப் பேதலிக்கச் செய்யும்; ஆற்றலைக் கெடுக்கும்; ஆள்வினையின் திறனைக் குறைக்கும்; மதிப்பைக் கெடுக்கும்; அவமதிப்பைத் தரும்; உறவைக் கெடுத்துப் பகையை வளர்க்கும். ஆதலால், வறுமை எந்தவகையிலும் கொடியது. அதனை எதிர்த்து முற்றாக ஒழிப்பது மனித குலத்திற்கு நல்லது.

ஆனால், வறுமைக்கு மாற்று, இரத்தலாக முடியாது. வறுமைக்கு மாற்று வளமேயாகும். இரத்தலின் மூலம் வறுமை தற்காலிகமாகவே மறைகிறது. அஃதொரு நிரந்தரமான மாற்றாக இருக்க முடியாது. வறுமைக்கு மாற்று, உழைப்பேயாம். உழைத்துச் செல்வம் பெருக்கினால் மட்டும் வறுமை போய்விடாது. திட்டமிட்ட வாழ்க்கை வேண்டும். பொருட்