பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சில கனவுகள் பயன்தரும் என்று கூறியுள்ளார்கள். அதாவது கனவு, நினைவுலகத்தின் விரிவாக அறிவுப்புலனொடு கூடிக் கண்ட கனவாக இருக்குமாயின் பயன்தரும். அதுவும் நாட்காலைக் கனவாக இருக்குமானால் முக்காலும் பயனளிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அங்ஙனமின்றி நினைவுலகத்துக்குத் தொடர்பில்லாமல் - அறிவுப் புலனுக்கு இயைபின்றிக் காணப்பெறும் கனவுகள் பயன் தாரா. அதோடு கனவினை நினைவுலகத்துக்குக் கொண்டுவந்து செயற்படுத்தி இன்பம் காண வேண்டியவனும் மனிதனே! அதற்குரிய ஆன்ற அறிவும் ஆள்வினையும் இல்லாதவர்களின் கனவு, ஒர் அமாவாசைக் கற்பனையே. இந்தக் கனவுக்கு இனமில்லை; தோற்றக்கால்கள் இல்லை. அஃதொரு வெற்றுச் சூன்யமாகவே விளங்கும். இத்தகைய கனவு காண்போர் பெரும்பாலும் சோம்பேறிகள்; மூடர்கள்; காமுகர்கள்; தாமும் வாழாது மற்றவர்களையும் வாழவிடாது தடுப்பவர்கள்.

கனவு நினைவுலகத்திற்கு - நடைமுறைக்கு வராது போனால், துன்பம் தொலையாது; மாறாகப் பெருகும். இன்பத்தின் எல்லையைத் தீண்டுதல்கூட அரிது. ஆனால் கனவு, காண்கின்ற நேரத்தில் இன்பமாக இருக்கும். கனவு, காண்கின்ற நேரத்திற்கு இன்பமாக இருப்பதை வள்ளுவர் எடுத்துக்காட்டுவதன் மூலம், கனவுலகில் வாழ்வதை மறுக்கிறார். கனவு, நிலைத்த பயன் தராது. சிலர் கனவுலகத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருப்பர். அவர்களுக்கு நிலையான ஒரு நினைவுலகம் இருப்பதே தெரியாது. பலர் சோம்பேறிகளாக ஆவதற்குக் கூடக் காரணம் கனவுதான்.

ஒருவர் பரிசுச் சீட்டில் ஐந்து இலட்சம் பரிசு விழுந்து விடுவதாகக் கனவு காணத் தொடங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தக் கனவு, காணத் தொடங்கிய பொழுதிலிருந்தே அவருடைய உணர்வுகளும் அறிவுப் புலன்களும் நல்ல பகல் பொழுதில் கூட கண்முன்னும், கை