பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வைப்பார்கள். இதுபற்றி மார்க்ஸ் கண்டுகொள்வதில்லை; கண்டுகொள்ள முயற்சி செய்ததில்லை. இது ஒப்புரவு நெறிக்குச் சான்று. ஒப்புரவு நெறிக்குத் திருவள்ளுவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் அனைத்தும் கடப்பாடுடையனவேயாம். ஊருணி, பயன்மரம், மருந்து மரம் ஆகியன கைம்மாறு கருதாது மனித குலத்திற்குப் பயன்படுகின்றன. அவற்றினுள்ளும் மருந்து மரம் தனக்கு வரும் தீங்கினையும் ஏற்றுக்கொண்டு வாழ்வளிப்பது.

“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்”

(217)

என்பது திருக்குறள். இதனை வலியுறுத்தியே,

“ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து”

(220)

என்றார். நிர்வாணமான சுயநலமும் பணவேட்டையும் நிலவும் இந்தக் காலத்திற்குப் பொதுவுடைமைச் சமுதாயத்தை நிகர்த்த திருவள்ளுவரின் ஒப்புரவு நெறியே சாலச்சிறந்தது.

இன்று நாகரிகம் என்ற சொல் கொச்சைப்படுத்தப் பெற்று வருகிறது. இன்றைய நாகரிகம் நம்முடைய தோலைக் கூடத் தொடவில்லை. புறத்தோற்றங்களே நாகரிகம் என்று கருதப்பெறுகிறது. திருவள்ளுவர் நெறியில் நாகரிகம் என்பது அதிநுட்பமானது. மனித சமூகத்தில் எல்லோரும் ஒரு மாதிரியாக நடந்து விடுவதில்லை. நாட்டில் சமூக அமைப்பு மகாபாரதம் போலத்தான் அன்றுமுதல் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அதாவது, நல்லவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் உரியவர்களை வலைபோட்டுத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை. நம்முடன் பல நாள் பழகிய நட்பினராயினும் ஒரு சின்னச் செய்திக்கும் கூட மனம்