பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3


திருவள்ளுவர் திருநாள் சிந்தனைகள்

மதுரை வானொலி ஒலிபரப்பு: 15.194

தமிழருடைய மறை, திருக்குறள். திருக்குறள் தமிழர் வாழ்வியலை விளக்குவது; அரண் செய்வது; பாதுகாப்பது: வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டுவது. திருக்குறள் ஒரு முழு நூல். வாழ்க்கை முழுவதும் தழீஇ வழிகாட்டும் நூல்.

சமுதாயத்திற்கு நான்கு அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றைத் திருவள்ளுவர் பாயிரமாகச் செய்துள்ளார். கடவுள் நம்பிக்கை, மழை, ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர், நீத்தார், சான்றோர் கூறும் அறிவுரைகள் - அறன் வலியுறுத்தல் ஆகியன. இந்நான்கும் மானுடம் வளர, வாழ வாயில்களாக அமைந்துள்ளன. மனிதன், மிருகமல்ல; மனிதனுமல்ல; விலங்குத் தன்மையிலிருந்து விலகி மனிதனாக வேண்டியவன். மனித நிலையிலிருந்து இறைமைப் பண்பு நிலைக்கு வளர வேண்டியவன் என்று திருவள்ளுவர் உணர்த்துகின்றார்.

மானுடம் வளர, வாழ, இல்லறம் உதவி செய்கிறது. ஆதலால், நாம் வழிபடும் கடவுள்களும் கூட இல்லறமே