பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 55


சமுதாயத்தில் செருக்குடன் நடந்து கொள்கின்றனர். இல்லாதவர்களுக்கு எளிதில் அவை கிடைப்பதில்லை. இதனால் அழுக்காறு வளர்ந்து எங்கும் குற்றங்காணும் படலங்களே சுறுசுறுப்பாக இயங்குகின்றன! நாலு பேர் கூடும் சமுதாயக் கச்சேரிக் கூடங்கள், மேடைகள் எங்கும் பழிதூற்று காதையே அரங்கேற்றம்! நுகர்வில் ஏற்பட்ட வித்தியாசம், கம்யூனிஸ்டுகளிடம் ஆள்வோர் என்ற எண்ணத்தில் ஏற்பட்ட இறுமாப்பு ஆகியனவே சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயின. உடுத்த முடியாமலும் உண்ணமுடியாமலும் அல்லலுறும் நிலையில், மற்றவர் வயிறார உண்ணுவதை, உடலார உடுப்பதைக் காணும் மனிதரில் தாழ்ந்தோர் அழுக்காறு கொள்வர். இதனைத் திருக்குறள்,

“உடுப்பது உம் உண்பதுரஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்”

(1079)

என்று கூறி விளக்குகிறது. ஆதலால், அண்ணல் காந்தியடிகள் கூறியதைப் போல, மக்களுக்கிடையில் நுகர்வில் 20 விழுக்காட்டுக்கு மேல் வித்தியாசமில்லாமல் கட்டுப்படுத்தினால் அழுக்காற்றைத் தவிர்க்கலாம். அதுபோல எல்லாருக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடிய சமுதாய நடைமுறை வேண்டும். அப்பொழுதுதான் அழுக்காற்றைத் தோற்றுவிக்கும் சமுதாயம் இல்லாது ஒழியும். இந்த நெறிமுறை உருவாக “எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான” சமுதாய அமைப்பு தவிர்க்க இயலாததும் கட்டாயமானதும் கூட! அதோடு பேறு பெற்றார் - செல்வம் பெற்றார் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புநராகவும் பணிவுடையவராகவும் இன்சொல்லினராகவும் வாழ்ந்திடின் அழுக்காற்றினைத் தவிர்க்கலாம்.

அடுத்து, மனிதன் எந்தச் சூழ்நிலையில் அழுக்காற்றுக்கு இரையாகிறான்: அழுக்காறு கொள்வோரின் பெரும்பாலோர் சோம்பேறிகளாக இருப்பர்; ஆனால்