பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடிப்படையாக அமையும் காமத்துப்பாலை மூன்றாவதாகவும் கொண்டு விளங்குகிறது. இந்த முறை வைப்பில் அமைத்தவர் திருவள்ளுவரா? அல்லது பின்னேவந்த உரையாசிரியர்களா? என்று ஒரு விவாதம் நடந்து வருகிறது. நாம் அந்த விவாதத்தைப் பற்றி அக்கறை காட்ட விரும்பவில்லை. ஆனால் இலக்கிய அமைவிலும் சரி, சமுதாய அமைப்பு முறையிலும் சரி இப்போதுள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முறை வைப்பு சிறந்தது; இயற்கையானது என்பதே நமது கருத்து.

திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் முன்பே முப்பாலாகச் செய்யத் திட்டமிட்டிருப்பாரா என்பது நமது ஐயம்; ஆய்வுக்குரிய செய்தி. மற்ற அறிஞர்களைப் போல ‘அறம்’ பற்றியே நூலியற்ற எண்ணியிருப்பார். ஆனால் அறத்துப்பாலின் முடிவில் “ஊழ்” என்ற அதிகாரம் வந்தமைகிறது. இஃது இயல்பும்கூட செய்யும் அறத்தைப் பொறுத்து ஊழ் அமைவதில்லை. அறம் செய்யும் நோக்கத்தைப் பொறுத்தே ஊழ் அமைகிறது. அறம் செய்யும் போது அறத்தைத் தற்சார்பின்றி அறத்திற்காகச் செய்யாமல், சமுதாய மேம்பாட்டிற்காகச் செய்யாமல் பற்றுடன் செய்வது ஊழிற்கு அடிப்படையாகிறது.

அறிவும் சமுதாய உணர்வும் கலந்த நிலையில் செய்யப் பெறும் எந்த ஒரு செயலும் ஊழ் ஆக உருப்பெறாது. ஆக, வாழ்தல் செயல் இயக்கமே! அதுவும் அறவழிப்பட்ட செயல் இயக்கமே! அந்த அறம், அறியாமை காரணமாகவும் சமுதாய அமைப்பின் காரணமாகவும், பொருளியல் குறைபாடுகள் காரணமாகவும் அமைவான அரசு அமையாமையின் காரணமாகவும் ஊழாக உருப்பெறுகிறது. தெப்பம் வெள்ளப் பெருக்கின் வழிப்பட்டுச் செல்லுதல்போல, மனிதன் ஊழின் வழிச் செல்ல லாகாது. ஊழை எதிர்த்துப் போராட வேண்டும். ஆதலால், ஊழை எதிர்த்துப் போராடுவதற்குரிய கருவி, கரணங்களை மனிதனுக்கு அறிமுகப்படுத்தப்