பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பல்வேறு அறிவியல் துறைகளைத் தழுவிய கருத்துக்கள் உண்டு.

“விசும்பின் துளிவிழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது”

(16)

என்ற திருக்குறளில் நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண்கண்டம், பசுமைக் கரு தாங்குதற்குரியது என்னும் மண் பாதுகாப்பு அறிவியல் பற்றிக் குறிக்கின்றார். அனிச்சம்பூ பயன்மரம், மருத்து மரம் என்று தாவரவியல் பற்றியும் பேசுகின்றார்.

“இன்னசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”,

(314)

“கொன்றன்ன இன்ன செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்”

(109)

என்ற குறட்பாக்கள் மூலம் உளவியல் உணர்த்துகின்றார். அரசியல், பொருளியல் எல்லாரும் அறிந்ததே. ஆதலால் திருக்குறளை அறிவியல் சார்ந்த ஒரு வாழ்வியல் நூலாகக் கருதவேண்டும்.

திருக்குறள் தனி மனிதனில் தொடங்கி, குடும்பித்தை உருவாக்கி, சமூகத்தைக் கண்டு, பின் சமூகத்தை நெறிப்படுத்தும் அரசைப் பற்றிப் பேசுகின்றது. சமூக அமைப்பு உருவாகின்ற போதுதான் ஊர், நகரம், நாடு முதலியன தோன்றுகின்றன. “பல குடும்பங்கள் தோன்றிய பிற்கு அவை ஒன்று கூடித் தினசரித் தேவைகளைத் தேடித் தருவதுடன் நிற்காமல், அதற்கும் மேலான ஒரு பலனை அடையவேண்டும் என்று முயற்சி செய்யுமிடத்துக் கிராமம் உருவாகிறது” என்பது அரிஸ்டாட்டிலின் கருத்து. திருக்குறளில் சமூகம், சாதி என்ற சொற்கள் இல்லை. குலம், குடி என்ற சொற்கள் உள்ளன. குலம் வேறு சாதி வேறு. குலம் ஒழுக்கத்தின் வழி வருவது. “குலம் சுரக்கும் ஒழுக்கம்