பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 67


குடிகட்கெல்லாம்” என்பான் கம்பன். “ஒழுக்கம் உடைமை குடிமை” என்பது திருக்குறள். ஆயினும் “உலகம்” என்று பல குறட்பாக்களில் திருவள்ளுவர் கூறுவதால் ச்மூக அமைப்பையும் விட எல்லை கடந்த பெரிய உலக சமுதாயத்தைப் பற்றியே திருவள்ளுவர் சிந்தித்துள்ளார். ஒழுக்கம் என்பதற்குப் புது இலக்கணம் கண்டுள்ளார்.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”

(140)

என்றார். கள்ளுண்ணாமை முதலிய பல்வேறு ஒழுக்க நெறிகளை - ஒழுகலாறுகளைத் திருவள்ளுவர் கூறினாலும், “உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலை” வலியுறுத்துகின்றார். மீண்டும்,

“எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு”

(426)

என்றும் வேறோரிடத்தில் கூறுகின்றார். ‘சான்றோரால் எண்ணப்பட வேண்டாதார் கள் உண்க’ - என்றதால் சான்றோருக்கு அளித்த முதன்மை புலனாகிறது.

உலகத்தைத் தழுவிநின்று ஒழுகி உலகத்தவரை நட்பாக்கிக் கொள்வது அழகு என்றும், அங்ங்னம் பெற்ற நட்பை மலர்தலும் குவிதலும் இன்றி ஒருநிலையாகப் பேணுதல் அறிவுடைமைக்கழகு என்றும் திருவள்ளுவ்ர் கூறுகின்றார்.

“உலகந் தழிஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு”.

(425)

ஆதலால் உலகந்தழிஇய நட்புடையராக வாழ்தலைத் திருக்குறள் வலியுறுத்துகிறது.

மானுட வாழ்வு செயல் இயக்கத் தொடர்புடையது. செயலாக்கத்தின் வளர்ச்சி பற்றிக் கூறும் வாழ்க்கை நூல்கள்