பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 71


வீடு பேறு என்ற உரை தவறு. வீடு பேறுபற்றி இரண்டு இடத்தில் - கடவுள் வாழ்த்திலும், துறவு அதிகாரத்திலும் கூறுகிறார்.

“யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”

(346)

என்று அருளியுள்ளமையை அறிக. திருக்குறளை ஒரு பொருள் முதல் வாத நூல் என்று கூறினும் தவறில்லை. இந்த உலகமும், மானுடமும் கடவுள் படைப்பு என்று திருவள்ளுவர் கூறவில்லை. இந்த உலகிற்கு முதலாக - முதலாவதாக வைத்தெண்ணப்படுபவரே கடவுள் என்பது திருவள்ளுவர் கருத்து. ஆதலால், திருவள்ளுவர்,

“செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்”

(759)

என்று ஆணையிட்டார். திருவள்ளுவர் காலத்தில் வேளாண்மைத் தொழிலும் வாணிகத் தொழிலும் மட்டுமே இருந்தன என்று தெரிகிறது. வேளாண்மைத் தொழில் பற்றிய அறிவியல் சார்ந்த செய்திகள் பல கூறுகின்றார்.

‘செய்க பொருளை’ என்பது வேளாண்மைத் தொழிலைச் செய்து உற்பத்தியைப் பெருக்குக என்பதேயாம். பொருட் செல்வத்தைப் போற்றிப் பாதுகாத்துப் பலருக்கும் கொடுத்து உண்டு வாழ்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கருத்து.

திருவள்ளுவர் காலத்திற்கு முன் ஈதல் - ஏற்றல் செயல்முறைதான் நிலவின. திருவள்ளுவரும் ஈதல் - ஏற்றல் பற்றிக் கூறியுள்ளார். ஆயினும் சங்ககால மரபுகளில் இல்லாத ஒப்புரவுப் பண்பைப் பற்றிப் பேசுகின்றார். ஒப்புரவறிதல் என்பது கூட்டுறவுப் பண்பை ஒத்தது. “கூட்டுறவு, எல்லாரும் எல்லாம் பெறுதலுக்குரிய சோஷலிச சமுதாயத்தின் முதற்படி” என்றான் லெனின். லெனின், கூட்டுறவு இயக்கம்