பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்”

(169)

என்பது அந்த ஆணை.

மக்கள் கூட்டமாகக் கூடி வாழத் தலைப்பட்டதனாலும், உற்பத்திகள் தொடங்கப்பெற்றுத் தனியார் சொத்துக்கள் பெருகி வளர்ந்ததாலும், சொத்துக்கள் அடிப்படையில் மோதல் ஏற்படாமல் தனியாரின் சொத்துடைமைகளைப் பாதுகாக்க அரசாங்கத்தை அமைத்தனர். முதல் அரசு, சொத்துடைமை வர்க்கம் அமைத்த அரசேயாம்! அதனால் இன்றுவரை சொத்துடைமை வர்க்கத்துக்குச் சாதகமாகவே அரசுகள் இயங்கி வந்துள்ளன! காலப்போக்கில் அரசுகள் வலிமையுடையன ஆயின. பல அரசுகள் கொடுங்கோல் அரசுகளாகவும் அமைந்தன; சில அரசுகள் மக்கள் நலம் நாடும் அரசுகளாக அமைந்தன. திருவள்ளுவர் நல்லரசைச் செங்கோல் அரசு என்றும் நலம் பயக்காத அரசைக் கொடுங்கோல் அரசு என்றும் குறிப்பிடுகின்றார். கி.பி. 1789முதல் 1799வரை நடந்த பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகும், கி.பி. 1917ஆம் ஆண்டில் நடந்த சோவியத் புரட்சிக்குப் பிற்கும் அரசுகளின் நடவடிக்கைகளில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் பாராளுமன்ற ஆட்சிமுறை கொண்டு வரப்பட்டு அரசனின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. பிரிட்டனின் ஆட்சிமுறை, முடியாட்சி முறை ஜனநாயக ஆட்சிமுறை இரண்டும் இணைந்தது. கிரேக்க நாடு, பிரதிநிதித்துவ ஆட்சிமுறை இருந்த நன்னாடு பொதுவாக உலக வரலாற்றில் மன்னர் ஆட்சியும், ஜனநாயக ஆட்சியும், இரண்டும் கலந்த ஆட்சிமுறைகளும் இருந்து வந்துள்ளன. நாம் இப்போது சில ஆட்சிமுறைகளைப் பார்ப்போம்.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் கண்டவர். சிறந்த அரசியல் ஞானி.