பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 77


சாணக்கியர் அரசனுக்குத் தண்டநீதி வழங்கும் உரிமையை வலியுறுத்துகின்றார்.

அரசன் மக்கள் வரியாகக் கொடுக்கும் பணத்தையும் ஈட்டும் பொருளையும் தனது பொருளாகக் கொள்ள வேண்டும். அரசு எக்காரணத்தை முன்னிட்டும் குடிமக்களிடமிருந்து நன்கொடை வாங்கக்கூடாது என்று தடை விதிக்கிறார்.

அடுத்து, நாம் அறிந்து கொள்ளவேண்டிய பெரிய அரசியல் ஞானி பிளேட்டோ. பிளேட்டோ கிரேக்க தேசத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 427 கி.மு. 347க்கும் இடைப்பட்ட காலம். பிளேட்டோ கண்ட அரசின் உயிர்நாடி நீதி. திருவள்ளுவருக்கு இது உடன்பாடே. ஆனால் ஆண் - பெண் உறவு, குழந்தைகள் பாதுகாப்பு முதலியவற்றில் பிளேட்டோ முற்றிலும் மாறுபடுகின்றார். குடும்பம் என்ற அடிப்படை பிளேட்டோவின் அரசில் இல்லை. பிளேட்டோவின் ஆட்சி தலைமைக்குத் தகுதியுடையவன் மன்னன்தான் என்பதல்ல.

பிளேட்டோவினாலேயே பாராட்டப் பெற்றவன் அரிஸ்டாட்டில் என்ற அரசியலறிஞன். இவனுடைய காலம் கி.மு. 384 - கி.மு. 322. மகாவீரன் அலெக்ஸாண்டருக்கு ஆசிரியன். அரிஸ்டாட்டில் குடியாட்சியையே விரும்புகின்றான்.

அண்மைக்காலத்தில் (கி.பி. 1818–83) வந்தது மாரக்கியம். மாமுனிவர் காரல்மார்க்ஸ் “மூலதனம்” என்ற ஒர் அரசியல் பெரு நூலை எழுதியுள்ளார். காரல்மார்க்சின் தத்துவம் பொருள் முதல் வாதமாகும். சோஷலிசம், பொதுவுடைமைச் சமுதாயம் முதலியன காரல்மார்க்சின் கொள்கைகள், சமுதாய மாற்றத்திற்குப் புரட்சி தேவை என்பது மார்க்சின் கொள்கை. காரல்மார்க்சின் பொதுவுடைமை அரசின் தொடக்கத்தில், கட்டுப்பாடுகள்