பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 89


“இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்”

(1040)

என்ற திருக்குறள் விளக்குகிறது.

இனி, திருவள்ளுவர் சமுதாயத் தீமைகள் சிலவற்றையும் விவரிக்கின்றார். சமுதாயத் தீமைகளில் முதன்மையானது நல்குரவு. நல்குரவு என்றால் வறுமை. அதாவது உண்பன உடுப்பன இன்றித் துன்புறுவது. ஒரு நாட்டில் நல்குரவு நிலவுவது அந்த நாட்டின் வளத்தைக் கெடுக்கும்; ஒழுக்கக் கேடுகளை உருவாக்கும்; பண்பாடுகளைச் சிதைக்கும். அதனால்தான் திருவள்ளுவர்,

“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”

(குறள் 1041)

என்றார். வறுமை, இம்மை வாழ்வையும் கெடுக்கும்; மறுமை வாழ்வையும் கெடுக்கும்.

நல்குரவு பற்றித் திருவள்ளுவர் புது இலக்கணம் வகுக்கின்றார். இயல்பாக உள்ள வறுமை வேறு; ஆசை காரணமாக வரும் வறுமை வேறு. அதாவது வாழ்க்கைக்குத் தேவை இல்லாதனவற்றை விரும்பி அது கிடைக்காத நிலையை வறுமை என்று கருதி அழுது புலம்புவாரும் உண்டு. அதுபோலவே, ஒருவகை வறுமையினை வரவேற்கவும் செய்கின்றார். அறஞ்சார்ந்த வறுமையை வரவேற்கின்றார். அதாவது பிறருக்கு வழங்கிய வழி வந்த வறுமையைப் புண்ணியம் சார்ந்த வறுமை என்கிறார். புண்ணியம் சாராத வறுமையைத் தாயும் வேண்டாளாம். நெருப்பிற்குள் துரங்க இயலும், வறுமையுடன் கூடி வாழ்தல் அரிது என்று. வறுமையின் கொடுமையைக் கூறுகின்றார்.

இன்று நமது நாட்டில் வறுமையுற்று வாழ்வோர் 43% இருந்து வருகின்றனர். அதிலும் கிராமப்புற வறுமை கொடியது. கிராமப்புற வறுமையை அகற்ற நமது மாநில,