பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 95


வாயில்களில் ஒன்று கற்றல். "கசடறக் கற்பவை கற்றால்" அறிவு பெறலாம். கற்பதனால்மட்டும் அறிவு வாய்ப்பதில்லை. கற்ற கருத்துக்கள் வாழ்க்கையில் இடம் பெறுதல் வேண்டும்.

      "உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

      கல்லார் அறிவிலா தார்"
(140)

என்றும் திருக்குறள் கூறுகிறது: "எனைத்தானும் நல்லவை கேட்க” என்றும் கூறுகிறது. கேட்பனவெல்லாம் அறிவினைத் தாரா. கேட்பனவற்றில் மெய்ப்பொருள் தேர்ந்து தெளிதல் வேண்டும். காணப்படும் - நுகரப்படும் பொருள்களை நுகர்வின் மூலம் நுனித்தறிதல் வேண்டும். <poem>"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு";

(423)

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(355)

என்றும் திருக்குறள் கூறுகிறது. அறிவு, உயிர்க்குத் துன்பம் வராமல் பாதுகாக்கிறது. அறிவு எனும் கருவி பெற்று வினைப் பகையை வென்று விளங்க வேண்டுமாயின் உயிர்க்கு உயிரொழுக்கமாகிய அன்பு தேவை. உயிரின் இருப்பு அன்புக்காகவேயாம். உயிர், உடம்பாகிய ஒரு கருவியைப் போர்த்துக் கொண்டது அன்புடையராக வாழ்தலுக்கேயாம். "அன்பின் வழியது உயிர்நிலை" என்பது திருக்குறள்.

உயிர், அன்புநலம் செறிந்தால் நல்லறிவினை நாடும். நல்லறிவு பெற்றால் உயிர் செயற்பாடுறும். நல்லறிவின் துணையால் உயிர், தீவினை - தீய செயல்கள் செய்யாது; நன்னெறி சார்ந்த செயல்களைச் செய்யும். அதனால் உயிர் துன்புறாது. உயிர் வாழ்க்கை துன்புறாது; உயிர் உய்திநிலை அடையும். அன்பு, உயிர்க்குலத்தைத் தளிர்க்கச் செய்து வளர்த்து வாழவைக்கும் அற்புத ஆற்றலுடைய பண்பு. அன்பு, எப்போதும் உலகத்தைத் தழீஇயது; உலகையே உறவாகக்