பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

89






மார்ச் 13


உதைத்துத் திருத்து ஓடிவந்து அருள் செய்!

இறைவா! நீ அளித்த அருட் கொடைகள் எவ்வளவு ஆற்றலுடையன, பயன் உடையன. பற்றி நிற்கும் மனம்; ஆய்வு செய்யும் புத்தி; நிச்சயிக்கும் சித்தம்; அறிவு சுரக்கும் மூளை. அம்மம்ம! இவ்வளவு இருந்தும் ஏன் நாங்கள் மகிழ்ச்சியோடு வாழவில்லை; இன்பமாக வாழவில்லை? ஏன்? என்ன குறை? உன்மேல் ஒன்றும் குறை இல்லை.

நான்தான் தலைகீழாக நடக்க நினைத்தேன், நடந்தேன், அதன் விளைவு இது. இறைவா, உன் திருவடிகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன? என், என்னை உதைத்துத் திருத்தக்கூடாதா? இந்த முட்டாளுக்குத் திருவடித் தீட்சையா என்று நினைக்கிறாயா? காலனிலும் கொடியவனா நான் அப்படி ஒன்றும் இல்லை. உதைத்துத் திருத்து, ஓடிவந்தருள் செய்!