பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

93





மார்ச் 17


எங்களுக்கு, எங்களையும் உன்னையும் காட்டி அருளுக!


இறைவா, கோடி இன்பங்களை அள்ளித் தந்துள்ளாய். நாங்கள் இவைகளை அறியாமல் அவலத்தில் ஆழ்ந்து கிடக்கிறோம்? ஏன் இந்த நிலை? இறைவா, என்ன சொல்ல? வயிறாரச் சோறு கிடைத்தாலே தலை கனத்து விடுகிறது. உன்னையே யார் என்று கேட்கும் அளவுக்கு மூர்க்கத்தனம் வளர்ந்துவிடுகிறது.

இறைவா, என்ன செய்வது? ஊனை வளர்த்த அளவுக்கு உணர்வை வளர்த்துக் கொள்ளவில்லை. "ஊனினைப் பெருக்கி உயிரை இழந்தேன்” என்ற அனுபவவாக்கு எங்கள் வாழ்விலிருந்து பிறந்ததுதானே? இறைவா! ஊனினை உருக்கும் ஒப்பறிய பணியைச் செய்து வரும் நீ, என் ஊனினை உருக்கு என் உள்ளொளியைப் பெருக்கு! எங்களுக்கு எங்களைக் காட்டியருள்க; எங்களுக்கு உன்னையும் காட்டியருள்க! இன்பத் தொட்டிலில் எங்களை இட்டு ஆட்டு. ஏழேழ் பிறப்புக்கும் ஆட்டியருள்க!