பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

பொறிகள் - புலன்கள் அனைத்தும் மெளனத்தில் ஈடுபடும் அருள் நயந்த வாழ்வினை அருள் செய்க. (மே 27) மனமும் ஐம்பொறிகளும் ஒத்திசைத்து இயங்கும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்று எண்ணுகிறார், தருகிறார். தீமை மடியவேண்டும் என்றும் நன்மை பெருகவேண்டும் என்றும் தீமையோடு சமரசம் செய்தல் கூடாது என்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். “உழைப்பே உலகு! உழைப்பே தெய்வம்!" (ஜூன் 12) என்பது அவருடைய கருத்து. சாமர்த்தியங்கள் சாதனைகளாகி விடா என்பது அவர் நம்பிக்கை. வாழ்க்கைக்கு மூலதனம் அன்பு, அவர் எண்ணம், பிறர்க்கென வாழ்தல். பெரிய நோன்பு அவருடைய நம்பிக்கை.

புழுவை எறும்பு அரித்தொழிப்பது போல, என்னைப் புலன்கள் அரித்தொழிக்கின்றனவே, நாள்தோறும் வெம்பி வெம்பிச் காகின்றேனே. என்றெல்லாம் புலன்களின் ஆற்றலை எண்ணித் துன்புறுகிறார். நகைச்சுவையாகப் பல இடங்களில் கருத்துக்களைத் தெரிவிக்கிறார். மனிதன் கருணையோடு வாழவேண்டும். இரக்கத்தோடு வாழவேண்டும் என்பது எண்ணம். இன்று என்னிடம் ஏது கருணை? கருணைக் கிழங்கு தான் இருக்கிறது. இறைவா, மன்னித்துக்கொள் என்கிறார். (ஜூலை 24)

உலகத்திலேயே இராமலிங்க சுவாமிகள் மட்டும்தான் மரணமில்லாத பெருவாழ்வு பெற்று, தன் உடலை ஐம்பூதங்களோடு இணைத்துவிட்டார். அடிகளாரும் மரணமிலாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்று நினைக்கிறார்.

இறைவா, மரணமிலாப் பெருவாழ்வை அடையும் நெறிகளை எனக்குக் கற்றுத்தா. எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரிடத்தும் ஒத்த உரிமை பாராட்டி வாழும் இயல்பினை அருளிச் செய்க. (ஆகஸ்டு 2) என்று கேட்கிறார்.

ஆகஸ்டு 15 சுதந்திரநாளில் சுதந்திரம் பற்றி நினைக்கிறார். தானும் முழுச் சுதந்திரத்தோடு வாழவேண்டும் என்று கேட்கிறார். மனம் ஒரு குப்பைத் தொட்டி என்பது அவருடைய கருத்து. (ஆகஸ்டு 17).

அம்மம்ம மாநகராட்சிக் குப்பைத் தொட்டியை விட மோசமான குப்பைகள் என் மனத்தில் குவிந்துள்ளன. என் மனம் எங்கெங்கோ சுற்றுகிறது. எதை எதையோ எடுத்துக்கொண்டு