பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

குன்றக்குடி அடிகளார் எனக் குவலயத்து மக்களாலும், தமிழ் மாமுனிவர் எனத் தமிழ் நெஞ்சங்களாலும், அடிகளார் என அன்பு உள்ளங்களாலும் அருள்நெறித் தந்தை என்று அருள்நெறி அடியார் திருக்கூட்டத்தினராலும், திருக்கயிலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் என்று மரபு வழியாலும் நீள நினைத்து நித்தமும் கை தொழுது போற்றப் பெறும் நம் அடிகள் பெருமானின் திருவருட் சிந்தனை, திருவருளாலும் குருவருளாலும் முகிழ்த்திருக்கிறது. வாழும் வள்ளுவராய், செயல்புரியும் செந்தண்மைச் சேக்கிழாராய், நடமாடும் அப்பர் பெருமானாய் நாளும் தமிழ்த்தொண்டு, சமயத் தொண்டு, சமுதாயத் தொண்டு ஆற்றி வந்தார். அடிகள் பெருமான் உண்மையிலேயே இவர் யார்? என்ற வினாவிற்குத் திருவருட் சிந்தனை அடிகளாரை இவர் இன்னார் இல்லை, இனியார் இவரைப் போல்? இனியார்? என்ற வகையில் நம்மிடம் அகப்பட வைத்து விடுகின்றது.

பிரார்த்தனை என்பது தன் ஆசைகளை, அபிலாசைகளை விண்ணப்பிப்பது அல்ல, பற்றற்ற நிலையில் தன் மனதை மேம்படுத்தி உலக நன்மைக்குத் தன் பங்களிப்பை ஏற்று அருள வேண்டுவது உண்மையான பிரார்த்தனை! தன் நன்மையும் உலக மேன்மையும் உராய்ந்து கொள்ளாமல் ஒன்றை ஒன்று இணைந்து உயர - வாழ வேண்டுவது உண்மையான பிரார்த்தனை என்பதை மகாசந்நிதானம் அடையாளம் காட்டுகின்றார்கள்.

“இறைவா! இந்த ஆண்டினை 'உழைப்பு ஆண்டாக'ச் செலவிட உறுதி எடுத்துக் கொள்ள அருள்செய்! வீணான,