பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

63





பிப்ரவரி 16
வசையெல்லாம் வாழ்த்தெனக் கொண்டுவாழ அருள் செய்க!


இறைவா! ஏன் இந்த நிலை? என்னை இப்படி எல்லோரையும் கொண்டு ஏசவைக்கிறாய். இறைவா! புரிகிறது உன் தந்திரம். ஏச்சுகள் மூலம்தான் புகழ் வேட்டையை நாடும் என்னைத் தடுத்து நிறுத்த முடியும் என்று நம்புகிறாய். மற்றவர் ஏச்சின் மூலம்தான் மான அவமான உணர்ச்சி மாறும் என்பது நின் திருவுள்ளம். எல்லோரும் ஏசட்டும். ஆனால், இறைவா, நீ ஏசமாட்டாயே! வாழ்த்தியருளுக.

என் மனம் நன்மையில் மகிழ்கிறது. புகழில் களிக்கிறது. இது ஒருதலை நிலை. நன்மை, தீமையில் நிலைதடுமாறக் கூடாது. "சகம் பேய் என்று" கூறினாலும் பொறுத்தாற்றும் பண்பு தேவை. இறைவா! நீ அமைத்த வாழ்க்கை என்ற எனது பள்ளியின் ஆசிரியர்கள் என்னை ஏசுபவர்களே; எதிரிகளே! வசையெலாம் வாழ்த்தெனக் கொண்டு உயர்ந்திட அருள் செய்க!