பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

69






பிப்ரவரி 22


எனக்கும் வாசியிலாக் காசு தருக!


இறைவா! உன்னை அருச்சிக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால், என்னுடைய பொறி புலன்கள் உன்னுடைய அருச்சனையில் ஈடுபட ஒத்துழைப்பதில்லை. பொறி புலன்கள் மட்டுமா? என்னைச் சுற்றியிருப்பவர்களும்கூட அப்படியேதான். ஆனால், அவமே பொழுது போகவில்லை. ஏதாவதொரு வேலை, வேலைக்குப்பின் வேலை.

இறைவா, கடமைகளின் காரணமாக உன்னை அருச்சிக்கத் தவறினால் என்னை மன்னித்துவிடு. இறைவா, மன்றாடுகிறேன். மன்னித்துவிடு. நீயே என் மனத்துக்குள் வந்து குடிபுகுந்துவிடு. அப்பொழுது உன்னை நினைப்பற நினைக்கிறேன். முன்பு கைத்திருத்தொண்டு செய்தவர்களுக்கு, உவப்படைந்து வாசியிலாக் காசு அருளியுள்ளாய்! எனக்கும் வாசியிலாக் காசு தந்தருள்க.