பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

141


தொன்மைய வாம்எனும் எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா!

(சிவப்பிரகாசம்-12)

என்ற உமாபதிசிவம் வாக்கும் இதற்குச் சான்று.

உலகில் பல்வேறு சமயங்கள் தோன்றியுள்ளன. அவைகளுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் முரண்பாடுகள் இருக்க வழியில்லை. வேறுபாடுகளும்கூட அந்தந்தச் சமயநெறிகள் தோன்றிய காலம், சூழ்நிலை, அனுபவம் இவைகளினால் ஏற்பட்ட தரவேறுபாடுகள்தாம்! சமயங்கள், நிறுவனங்களாக மாறியவுடன் வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி முரண்பாடுகளை உருவாக்கித் தம்முள் முரணி மோதிக் கொண்டு வந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தத் தீமையும்கூட சமயம், நெறியாக இல்லாமல் நிறுவனமாக மாறியதால் ஏற்பட்டதன் விளைவேயாகும்.

ஆனால், உண்மையான சமய ஆர்வலர்கள் ஒருமைப் பாட்டையே காண முயன்று வந்துள்ளனர். தாயுமானார்,

வேறுபடு சமயமெலாம் புகுந்து பார்க்கின்
விளங்குபரம் பொருளே! நின் விளையாட் டல்லால்
மாறுபடும் கருத்தில்லை; முடிவில் மோன
வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா!

(தாயுமானவர், கல்லாலின்:25)

என்று கூறுவதால் அறியலாம்.

மனித குல வரலாற்றின் தொன்மையில் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடியேயாம். இது வரலாற்றறிஞர்கள் கண்டு கூறும் முடிபு. தமிழினத்தின் வரலாற்றுத் தொடக்கம் கி.மு. முப்பதாயிரத்திற்கும் அப்பால் செல்கிறது.

பல ஊழிகள் கண்ட வரலாறு தமிழர் வரலாறு. தென் கோடியில் தொன்மை நலம் சான்ற “தென்குமரிக் கண்ட நாகரிகமும்” வடகோடியில் “சிந்து வெளி நாகரிகமும்” தமிழ்ச்