பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

145


மூன்றாவது, ஆசிரியனாக இருந்து நன்னெறி உணர்ந்தும் திருக்கோலம். இதனை “ஆலமர் செல்வன்” (சிறு, பா 97, கலி, 819) என்றும், “ஆலமர் கடவுள்” (புறம் 198-9) என்றும் சங்க கால இலக்கியங்கள் பாராட்டும். வாழ்க்கையில் இயல்பாகச் சமய நெறி-முறைகள் அமையாது மனித உலகம் புறத்தே விலகிச் செல்லும் பொழுது நன்னெறி உணர்த்த அறிவர்கள்-ஞானிகள் தேவைப்படுவர்.

அதுபோலத் தமிழினம் நெறியல்லா நெறிதன்னை நாடிச் சென்ற பொழுது சிவபரம்பொருளே ஆசிரியனாக எழுந்தருளி நெறியுணர்த்தி வழி நடத்துகிறான் என்பது தமிழர் சமய மரபு. சிவநெறிக்கு இறைவனே முதல் ஆசிரியன். அவன் வழிபடும் பொருள் நிலையிலிருந்து இறங்கி, வழிகாட்டும் நிலைக்கு வந்த பிறகு, ஆசிரியன் நிலையில் வழிபடும் நிலையை எய்தினன். சங்க இலக்கியங்களில் சிவன் ஆலமர் செல்வனாக இருந்து அறமுணர்த்திய செய்தி கூறப்பெறுகிறது.

நான்காவது, உலகியல் இயக்கத்திற்கு உரியதாயிருக்கின்ற நிலம், நீர், தீ, வளி வெளி, கதிரவன், திங்கள் ஆதன் என்னும் எண் பொருள் வடிவினனாகவும் அவன் வழிபடப் பெற்றிருக்கிறான்.

ஐந்தாவது ஆடல்வல்லான் (நடராசன்) வழிபாடு. இவ்வுலகியக்கத்தை ஓயாது தனது ஆடல் மூலம் இயக்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்பெறும் திருமேனி இது. குமரி நாடிருந்த காலத்திலேயே குமரிக்கும் பனிமலைக்கும் நடுவணதாக நெஞ்சத்தமைப்பு மையமாகக் கருதி, தில்லையம்பலம் அமைத்து ஆடல்வல்லானைப் பாண்டியன் அமைத்தான் என்று ஒரு வரலாறு உண்டு.

சிந்துவெளி நாகரிக மக்கள் மூன்று கண்களையுடைய சிவபெருமானை வணங்கினர் என்பதும், சிவலிங்க வழிபாடு இருந்ததென்பதும் ஆங்கு அகழ்ந்தெடுக்கப் பெற்ற