பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


4. கோவை சிரவணபுரம் கெளமார மடாலயம்.
5. கோவிலூர் ஆதீனம்.
6. திருவண்ணாமலை ஈசான்ய மடம்.
7. திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம்.

ஆகிய திருமடங்களும், மற்றும் பல திருமடங்களும் செந்தமிழுக்கும் சிவநெறிக்கும் சிறந்த முறையில் பணி செய்து வருகின்றன.

சைவ சித்தாந்தச் சமயத்திற்குத் தொன்மையான வரலாறு உண்டு; காலத்திற்குக் காலம் அது வளர்ந்து வந்திருக்கிறது. பல்வேறு புறத்தாக்குதல்களைக் கண்டு வெற்றி பெற்று விளக்கமுற்று வந்திருக்கிறது.

இன்று தமிழகத்தில் அணி செய்து நிற்கும் ஆயிரமாயிரம் ஆலயங்கள், சித்தாந்தச் செந்நெறியின் ஆன்ம அனுபவச் செயல் முறைக் கழகங்களாகத் தோன்றியவை. சித்தாந்தச் சைவம் தனித்தன்மையில் நின்று விளங்கிய வகையில் அது ஒளித்தன்மையுடையதாக விளக்கம் பெற்றிருந்தது.

பிற்காலத்தில் தோன்றிய புறச் சமயங்களைச் சந்திப்பதற்காக அகச் சமயங்களிடையே ஏற்படுத்தப் பெற்ற இணைப்புகளாக மட்டுமல்லாமல் கலப்பாகப் போய் விட்டதால் இந்தச் சமயமும் இன்று பகுத்தறிவு சர்ச்சைகளுக்குள்ளாகி நிற்கிறது.

அகச் சமயங்களுக்கிடையே கலப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, அதனுடன் மாயாவாதக் கலப்பும் ஏற்பட்டது. இவ்வாறான கலப்பு நிலையில் “இந்து மதம்” என்ற பெயர் தோன்றியது. இந்தக் கலப்பினால் ஏற்பட்ட மயக்கங்கள் இன்று மலிந்துள்ளன. அதன் காரணமாகச் சித்தாந்தச் செந்நெறி இனம் கண்டு கொள்ள முடியாமல் கனித்தன்மையை இழந்திருக்கிறது. இன்றையச் சித்தாந்த