பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முறைகளில் ஈடுபடுவோர், பெருமைகள் பல பெற்று விளங்குவர்; பெரியோர் ஆவர். இதனைத் திருநெறிய தமிழ்,

கற்றல் கேட்டல் உடையார் பெரியார் -
(அடங்கன்முறை முதல் திரு.2)

என்று கூறுவதால் அறியலாம்.

“இறைவனைப் பூசித்தல் மட்டும் பூசையன்று. பேரறிவைத் தந்து சிவத்தைக் காட்டிடும் ஞான நூல்களை ஓதுதலும் பூசனையோடொக்கும்” என்று சிவஞான சித்தியார் செப்பும்.

ஞான நூல்தனை ஓதல், ஓதுவித்தல்

நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா

ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்

இறைவனடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
(சிவஞானசித்தியார் : எட்டாம் சூத்.23)

என்பது திருப்பாடல். இங்ஙனம் கற்றல், கேட்டல் உடையோராகி ஞானநூல்களை ஓதும் வேள்வியில் ஈடுபட்டால், பொறி, புலன்களின் முக்குணம் மாறும்; ஆற்றல்களைக் குவிக்கும்; புலால் உடம்பினோடேயே சிவமாம் தன்மையை அடையலாம்.

சீவிக்கின்ற பெத்தநிலையில் (இருள்மல நிலையில்) அதாவது அறியாமையில் பிழைப்பு நடத்தும் நிலையில் உயிர், அறிவும் நலனும் பெற்றுச் சிவமாம் தன்மையை எய்தி விளங்கலாம்; கொடிய துன்பங்களையும் வெற்றிபெறலாம்; இயற்கைகளை வென்று ஆட்சி செய்யலாம். சமய ஆசிரியர்கள் இத்தகைய அரிய செயல்களைச் செய்திருக் கின்றனர். அவர்கள் தம் பொறி, புலன்களைச் சிவத்தினைச் சார்ந்திருக்கச் செய்ததால்தான் அந்த ஆற்றல் கைவரப் பெற்றார்கள். தோற்ற அளவில் சீவாத்மாக்களின் தோற்றத்திற்கும்-சிவஞானிகளின் தோற்றத்திற்கும் யாதொரு வேறு