பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவன் திருமுன்பு சமய ஒழுக்கத்தால் ஒன்றுபட்ட எல்லாரும் உடனிருந்து உண்ணும் சிறந்த பழக்கம் தடைப்பட்டுப் போயிற்று.

சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்த ஆதீனகர்த்தர்களின் சமயத் தலைமையைச் சுமார்த்தக் கலப்பின் மூலம் அடையத் துடிக்கிறார். தீக்கை பெறாத, ஐந்தெழுத்தை எண்ணாத, ஆகமங்களை நம்பாத-ஏற்றுக் கொள்ளாத சங்கராச்சாரி யாரிடம் சமய, விசேட நிர்வாண தீக்கைகள் பெற்று சிவாச்சாரியராகிப் பெருமானை அர்ச்சிக்கும் பேறு பெற்றவர்கள் “சான்றிதழ்” வாங்க வேண்டி இருக்கிறது.

ஆகமங்களின் வழியும் தமிழ்த் திருமறைகளின் வழியும் நமது திருக்கோயில்களில் பூசனைகளும் நடைமுறைகளும் அமைய வேண்டும். திருக்கோயில் வழிபாட்டில் கட்டணங்கள் விதித்து வாங்கும் பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அத் திருக்கோயில் பெருமானை ஆன்ம நாயகனாக ஏற்று வழிபடுவோர் பட்டியல் தயாராக வேண்டும்.

தமிழர்-சித்தாந்தச் செந்நெறியைச் சார்ந்தவர்கள் சிவத்தை யாதானும் ஒரு பெயரில்-சிறப்பாக அவர்கள் ஊரில் எழுந்தருளியிருக்கும் பெருமானை ஆன்மநாயகனாக ஏற்றுக்கொள்வதைப் பழக்கப்படுத்த வேண்டும்; வழக்கப்படுத்த வேண்டும். இங்ஙனம் அந்தத் திருக்கோயில்களில் வழிபடுவோர் ஆண்டுதோறும் முறையாக வழங்கும் நன்கொடையிலிருந்தே திருக்கோயில்கள் பேணப்பெற வேண்டும். பூசனைகள் செய்விக்கப் பெறவேண்டும்.

வழிபடுவோர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டே நடத்தப் பெற வேண்டும். அங்ஙனம் நடக்கும் நிகழ்வுகளுக்கும் காணிக்கைகள் வாங்கலாம்; வழிபடுவோரிலிருந்து தெரிவு செய்யப்