பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

223


பெற்ற ஒரு சிலர் கொண்ட குழுவைக் கொண்டே திருக்கோயில் ஆட்சிமுறை நடைபெற வேண்டும்.

திருக்கோயிலின் வழிபாட்டுச் சடங்குகள் எளிமை யானவையாக அமைய வேண்டும். இனிய தமிழிலும் அமைய வேண்டும். திருக்கோயில்களில், ஆகமங்களிலும் திருமுறை களிலும் தோய்த்த புலமையும், பழுத்த மனமும் கொண்ட சிவாசாரியர்கள் நியமனம் செய்யப் பெறுதல் வேண்டும். அவர்கள் மூர்த்திகளைத் தூய்மை செய்து, நாள்தோறும் பெருமானை வழிபடுவோர் வழிபட்டுய்ய எழுந்தருளச் செய்யும் செய்முறைகள் நிகழ்த்தி, வருகிற பக்தர்களுக்கு ஆச்சாரியனாக இருந்து, பெருமானைக் கண்டும் காட்டியும் வழிபாடு செய்து கொள்ளும் நெறியில் வழிபடுத்தியும் துணை செய்ய வேண்டும்.

தீக்கை பெற்று, அத்திருக்கோயிலில் வழிபடுவோர் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு அவர்கள் தாமே பெருமானுக்குப் புனலும் பூவும் சொரிந்து வழிபாடு செய்து கொள்ளும் உரிமை இருக்க வேண்டும். திருக்கோயிலின் சிவாசாரியர்கள் ஆசிரியப் பணியைத்தான் செய்ய வேண்டும்; புரோகிதர்களாக விளங்கக் கூடாது; தரகர் நிலைக்குத் தம்மைத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

எல்லாரும் திருக்கோயில் சென்று பெருமானை வழிபாடு செய்துகொள்ளும் உரிமை இருந்தது என்பதற்கு நமது திருக்கோயில் புராணங்களே சான்று. நண்டும், எறும்பும் பூசித்திருக்கும் போது மனிதன் பூசிக்கக் கூடாதா? கண்ணப்பர் வரலாறு எதைக் காட்டுகிறது?

கண்ணப்பர், காளத்தியண்ணலைத் தொழ யாதொரு தடையும் இருந்ததில்லையே! சிவாசாரியார் கூட, யார் வழிப்பட்டது என்று கவலைப்படவில்லை. அவருக்கு இருந்த கவலை, சந்நிதியில் கிடந்த புலால் துண்டுகள் பற்றியதுதான். ஆயினும் கண்ணப்பர் பூசனையே சிறந்தது என்று