பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோயில்கள் சமய அனுபவத்திற்குரியன. இந்நெறி முறையில் இணைந்த பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றால்தான் நமது சமுதாயம் சமய நெறியில் நின்றொழுக இயலும்.

இன்றைய நிலை என்ன? திருமடங்கள் மக்களுக்குத் தீக்கைகள் செய்விப்பதை மறந்துவிட்டன. இல்லை, கடமையல்ல என்று கூறி மறுக்கின்றன. ஏன்? ஒருபுறம் நிலவும் சாதிமுறைத் தடை, பிறிதொருபுறம் இல்லறம், துறவறம் தடை என்றெல்லாம் கூறுவர். இவை பொருளற்ற சமாதானங்கள். உண்மையான காரணம் அவற்றுக்கு ‘உயர் மனப்பான்மை’ வந்துவிட்டது. மக்களிடத்திலிருந்து ஒதுங்கி வாழ்வதுதான் சிறப்பு, பெருமை என்ற முடிவுக்கு வந்துவிட்டன.

இங்ஙனம் நிலைமைகள் மாறியதற்குக் காரணம் அவைகளின் செல்வச் செழிப்பும் அவ்வழி கால்கொண்ட சாதீய முறைகளுமேயாம். இவை இரண்டின் காரணமாக அவைகளைச் சார்ந்து பிழைப்பு நடத்துகின்றவர்கள் அவைகளின் திசைகளையே மாற்றிவிட்டனர். மேலும் ஒரு காரணம் தமிழர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் துறவை விரும்புவதில்லை. அஃது அவர்களின் நாகரிகமும் அன்று. அதனால் பரவலாகத் திருமடங்களுக்குத் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தூய பணிகளைச் செய்யத் தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை. அதனால் திருமடங்களில் துறவிகளின் எண்ணிக்கை எப்பொழுதுமே பல்கிப் பெருகியதில்லை. அதன் காரணமாகச் சில சமயங்ககளில் சந்தையில் மலிவாகக் கிடைத்த சிலர் துறவிகளாயினர்.

எனவே, செந்தமிழ் நூற்புலமைக்கும், சித்தாந்த ஞானத்திற்கும் உறைவிடமாக இருந்த திருமடங்கள் காலப்போக்கில் அந்தத் தகுதியை இழந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பழமொழி வழங்கப்படுகிறது. வயது வந்த பிள்ளையை வைத்திருக்கிற சைவர்களைப் பார்த்துப் பிள்ளைகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்று