பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தில் வரம்புகள் வரையறுக்கப்படாத வைப்புநிதியும் இல்லை. வரையறுக்கப்படாத அதிகாரங்களும் இல்லை.

தன்னிச்சைக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள வேறுபாட்டை நமது சமயத் தலைவர்கள் அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும். தன்னிச்சைப் போக்கு கீழ்மையானது. யாருக்கும் கட்டுப்படாதது. ஏன்? தமக்குத் தாமே கூடமனசாட்சிக்குக் கூட கட்டுப்பட மாட்டார்கள்.

சுதந்திரம் என்பது துய்மையானது; உயர்ந்தது; சுதந்தர உணர்வுடையவர்கள், சொல்லும் உரிமையும் பெறுவார்கள் கேட்கும் கடமையும் பூண்பார்கள். ஆளவும் செய்வர்; ஆட்படவும் செய்வர். இத்தகு சுதந்திரம்தான் திருமடங்களுக்குத் தேவை.

தம் நெறி நிற்பார், நம்மையொத்த திருமடத்துத் தலைவர்களுடன் கலந்து பேசியும் சொல்வன சொல்லியும், கேட்பன கேட்டும் தக்காங்கு ஒத்ததறிந்து ஒழுகி, ஆளவும் ஆட்படவும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொண்டு, பணிப்பங்கீடுகள் செய்து முறையாகச் செயற்பட்டால்தான் “மேன்மைகொள் சைவ நீதி” உலகம் எல்லாம் விளங்கும். இதனை அவர்கள் செய்ய முன்வர வேண்டும். இல்லையெனில் சித்தாந்தச் செந்நெறியில் ஆர்வமுடையோர் இந்நிலை கொள்ளும் வழிவகை பற்றிச் சிந்திக்க வேண்டும்; செயற்பட வேண்டும்.

இந்தியா சமயச் சார்பற்ற ஒரு நாடு. இந்த நிலையை இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கடந்த காலச் சமயத் தலைவர்களும் புரோகிதர்களும் கொண்டு வந்து விட்டனர். இந்த அவல நிலை உருவாகாமல் தடுக்க தோன்றிய புத்தர், குருநானக், பசவேசர், விவேகானந்தர், வள்ளலார் ஆகிய இந்திய சமயச் சிந்தனையாளர்களுடைய தூய சமுதாய நலம் பயக்கத்தக்க கருத்துக்களை இறுக்க நிலையடைந்த பழைய சமய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள