பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறினாலும் தவறன்று. மார்க்சீயம், கடவுளால் உயிர்களும், உலகமும் படைக்கப்பட்டன என்ற கொள்கையுடைய சர்ச்சு மதத்தைச் சந்தித்தது. சைவசித்தாந்தம் சொல்லும் உயிர் நிலைக்கும் மார்க்சீயத்துக்கும் வேறுபாடு பெரிதன்று. மனிதனைவிட மேம்பட்ட ஒன்றை மார்க்சீயம் ஏற்பதில்லை. சைவ சித்தாந்தம் மனிதனை மேம்பாடுடையவனாகவே தான் காண்கிறது.

பல ஆண்டுகள் சோவியத் புரட்சித் தொண்டர் படையில் பணி செய்து பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஒளிவிளக்காகத் திகழ்ந்து, பொதுவுடைமைத் தத்துவத்தைப் பொருத்தி, அழித்துவிட எண்ணிய நாசிசத்தை - பாசிசத்தை எதிர்த்து, வெற்றிவாகை சூடிய வீரன் “ஸ்டாலின்” வாழ்க்கையில் ஏற்பட்ட பின்விளைவுகள் என்ன? இரண்டாவது உலகப் பெரும்போரில் ஸ்டாலின் பெற்ற பெரு வெற்றிக்குப் பிறகு, ஸ்டாலின் தன்னிச்சைப் போக்காக நடந்து கொண்டார்.

பொதுவுடைமைக் கொள்கையின் இன்றியமையாத ஒழுக்க நெறிகளாகிய கூட்டுச் சிந்தனை, கூட்டுச்செயல் ஆகியவற்றினின்றும் முறை பிறழ்ந்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அவருடைய மரணத்திற்குப் பிறகுகூட உயர்தரக் கல்லறையிலிருந்து அவருடைய பிணம் பொதுவுடைமைக் கட்சியினாலேயே அகற்றப் பெற்றது. இந்த விளைவுகளை உற்றுநோக்கின் சைவசித்தாந்தம் கூறும் ஆணவம்-இல்லை என்று கூற யாருக்கு மனம் வரும்? உயிர் இயல்பில் ஆணவச் சேர்க்கையுடையது.

ஆணவம், உயிரைத் தன்னிச்சைப் போக்கிலும் அகங்கார வழியிலும் செலுத்தும்; அதன் காரணமாக உயிர் கீழ்மையுறும். சூழ்நிலைகளின் காரணமாக ஆணவம் தோற்றப்படாதிருந்தாலும், செயற்படாதிருந்தாலும் சூழ்நிலைகள் மாறும்பொழுது உயிரின் ஆணவ இயல்பு மேலிட்டுச்