பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

237


செயற்பாட்டுக்கு வரும். இதனை உணர்ந்து என்றும் உயிரை, உணர்வை கடவுள் என்ற தலைவனுக்கு ஆட்படுத்தி வைப்பது தற்காப்பாகும் என்ற சித்தாந்தச் செந்நெறியின் கருத்து ஆராய்தற்குரியது.

பொதுவுடைமைக்கொள்கையின் குறை-நிறைகளை ஏற்றுக் கொண்டு ஈடுகொடுத்துச் சமய நெறியை வளர்க்கச் சமயங்கள் முன்வரவில்லை. எனவே மனித குலத்தின் பொது நன்மை கருதியும் சமயப் பண்புகளைக் காக்கவும் “உலகச் சமயங்களின் ஒருங்கிணைப்பு நிறுவனம் காணவேண்டும். அது காலத்தின் தேவை. இத்தகு பொற்காலமே சித்தாந்தச் செந்நெறி படைக்கும் தகுதியுடையது. அந்தப் பொற் காலத்தை எதிர்பார்ப்போமாக!”

சைவ சித்தாந்தத்தில் வாழ்க்கை அருமையானது. சைவ சித்தாந்தத்தில் சாதிகள் இல்லை; சிறந்த மனையறம் போற்றப் பெறுகிறது. பொருளியல் ஏற்றத் தாழ்வற்ற சமுதாய அமைப்பே சைவ சித்தாந்தச் செந்நெறி! சைவ சித்தாந்தத்தின் தத்துவம் செயலுருக் கொள்ளுமானால் வையகம் இன்புறும்! இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

சிவ சிவ