பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமய நிறுவனங்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை சமய நிறுவனங்கள் மூவகையின. ஒன்று திருக்கோயில்கள், பிறிதொன்று திரு மடங்கள். மற்றொன்று சமுதாயத்தினர் சமய வளர்ச்சியில் ஆர்வங்காட்டித் தோற்றுவித்த அமைப்புகள். இந்த மூன்றும் சமய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் இன்றியமையாதவை. இந்த நிறுவனங்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், இம்மூன்றினிடையேயும் ஒருமைப்பாடும் ஒருங்கிணைப்பும் தேவை. நம்முடைய நல்லூழின்மையினால் இன்று இந்த ஒருங்கிணைப்பு இல்லை. ஒருசில அமைப்புகளுக்கு இருக்கின்றன. ஆனாலும் அந்த ஒருங்கிணைப்பு நிறைநலம் பெற்றனவாக அமையவில்லை. அருள்நெறித் திருக்கூட்டத் திற்குக் குன்றக்குடித் திருமடத்தோடு இணைப்பு இருக்கிறது. இந்து சமய மன்றங்களுக்குக் காஞ்சிபுரம் சங்கரர் மடத்தோடு இணைப்பு இருக்கிறது. சிறப்பாகச் செயல்பட்டு முடக்கப்பட்ட பேரவைக்குத் தமிழகத்தின் எல்லாத் திருமடங்களோடும் உறவிருந்தது. ஏன்? சமய அமைப்புகள் அனைத்துடனும் கூட உறவு இருந்தது. ஆனாலும் செழுந்தமிழ் வழக்கு வெற்றி பெற்றுவிடக் கூடாது, சமயத்துறையில் காஞ்சிபுரம் சங்கரர் மடத்துக்கு இருக்கும் ஆதிக்கம் நெகிழ்ந்து போதல்கூடாது என்ற குறிக்கோளுக்கு இரையான நெருக்கடி கால அரசு, நெறிமுறைகளுக்கு இசையாத வகையில் ஆட்சியைப் பயன்படுத்திப் பேரவையை முடக்கிவிட்டது. இன்றைய அரசு பேரவையின் பணிகளுக்குச் சாதகமாகவும் இல்லை; பாதகமாகவும் இல்லை. ஆனாலும் திருமடங்களின் அமைப்புத்தானே! அவர்களிடத்திலேயே பொறுப்பை ஒப்படைத்து அவர்களைச் செயற்படவிட வேண்டும் என்ற விருப்பம் நாம் வற்புறுத்தியும் கூட அரசுக்கு வராதது ஏன் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்திற்குப் பேரவையைச் செயற்படுத்த அரசு முன்வர