பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்தச் செந்நெறி

257


சமயத்தில் நம்பிக்கையுடையவர்கள் சிலரைப் பேராளர்களாகத் தேர்ந்தெடுத்து அனுப்பும். பேரவை, தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கின்ற சமய அமைப்புக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பேராளர்களையும், இந்து சமய நம்பிக்கையுடைய பட்டதாரிப் பேராளர்களையும், இந்து சமய நம்பிக்கையுடைய வழக்கறிஞர் குழுவின் பேராளர்களையும் இந்து சமய நிறுவனங்களில் தொண்டு செய்வோர், அலுவல் செய்வோரின் பேராளர்களையும் கொண்டதாக அமைய வேண்டும். இஃது ஒரு சுருக்கமான உத்தேச வரையறை. இந்த அமைப்பின் நிர்வாக இயக்குநராக இந்திய நிர்வாகப் பணித் தேர்வில் (I.A.S) தேர்ச்சிபெற்ற தகுதிவாய்ந்த ஒருவரை அரசிடமிருந்து பெற்று ஆட்சிக்குழு நியமித்துக் கொள்ளும். ஆட்சிக் கழகத்தின் செயல்முறையைக் குறைந்தது ஐந்து பகுதிகளாக வகுத்து இயக்கலாம்.

1. பொது நிர்வாகம்.

அ) உடைமைகள் வளர்ச்சி
ஆ வருவாய்ப் பெருக்கம்

2. திருக்கோயில் நிர்வாகம்

அ) திருக்கோயில் நாட்பூசை
ஆ) திருவிழா

3. இந்து சமுதாய மேம்பாட்டுக்குரிய கல்வி, மருத்துவப்பணிகள்.
4. பிசாரம்-வெளியீடு
5. தணிக்கைப் பிரிவு

இவ்வைந்தும் தனித்தனி இயக்குநர்களால் செயற்படுத்தப்பெற வேண்டும். இந்த நிலை உருவாகும் பொழுது பெயரளவில் தனித்தனிக் கோயில், திருமடம் என்று கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நிதியைப் பொறுத்த வரையில் ஆட்சிக் குழு வகுக்கும் நிதியியல் முறைகள் கடைப்