பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

281


ஒருவரிடம் நான் எப்படி அன்பு செலுத்தாமல் இருக்க முடியும்?

அவர்மீது மிகுந்த அன்பு செலுத்துவது இயற்கை தானே! ஆனால், அதே சமயத்தில் என்னோடு மாறுபட்ட - என்னோடு ஒத்துவராத-வேறொருவரிடம் அன்பு செலுத்தாது இருந்தால் அது தவறு! நான் மனித இனக் கண்ணோட்டத்துடன்-நாகரிகக் கண்ணோட்டத்துடன் என்பால் அன்பு செலுத்தாதவர்மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுத்தது நான் மேற்கொண்டொழுகும் சமய வாழ்வுதானே! மனித இன நாகரிகத்தை-கண்ணோட்டத்தை வகுத்துத்தருவது சமயம் தான.

வாழ்த்தியவர்கள் எல்லோருக்கும் வீடுபேறு கொடுத்ததாக வரலாறு இல்லை. இராவணன் சிறந்த சிவபக்தன்; நாள்தோறும் ஏழுகடலிலும் குளித்தெழுந்து இறைவனை ஏத்திய பக்தன்தான்! ஆனால் அறத்தின் பெயரால்-அறத்தின் முன்னிலையில் ஆண்டவனால் ஒதுக்கப்பட்டான்.

இதயமும் நாமும்!

அறம்வேறு! சமயம்வேறு அல்ல. கை, கால் எல்லாம் சேர்ந்ததுதான் உடம்பு. இவை இல்லாமல் உடம்பில்லை. இவை எல்லாம் உடலின் உறுப்புக்கள். இவை இல்லா விட்டாலும் ஒருவன் வாழ்ந்து விடலாம். இதயம் இல்லாமல் ஒருவன் வாழமுடியுமா? இதயம் வேறு நாம் வேறு அல்ல. நம் வாழ்வுக்கு இதயம்போல, சமயத்திற்கு அறம். ஆகவே சமயம் வேறு அறம் வேறல்ல. அறமே சமயம், சமயமே அறம்.

சண்டைகள் குறைய

சமயம் இல்லாத-மதம் இல்லாத உருசியா இன்று உலகில் சிறப்புடன் இருப்பதாகவும்-சமயம் வளர்க்கப்பெற்ற