பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உழுத நோன்பகடு அழிதின் றாங்கு

என்று புறநானூற்றுப் புலவன் பேசுகிறான்.

போர்க்களம் சென்று மாற்றாரைப் பொருது வெற்றியுடன் விழுப்புண் தாங்கி வருகிறான் மன்னவன். போரில் அயராது போரிட்ட அனைவருக்கும் வாரி வழங்கி மகிழ்ந்தான். தான்மட்டும் உண்ணவில்லை-உண்பதற்கு ஒன்றும் இல்லை. ஒரு கோப்பை மது குடித்து மகிழ்கிறான். அத்தகைய மன்னனுக்குத்தான் எருதை உவமையாகக் கூறுகிறார் புலவர்.

கழனியை உழுவது காளை-எரு ஏற்றிவந்து கொட்டுவது காளை-கதிரடித்துத் தருவது காளை-வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும் காளை! செந்நெல்லரிசியும் செங்கருப்பச்சாறும் கொண்டு பொங்கல் பொங்குகிறான் உழவன். வயிறார உண்டு மகிழ்கிறான். உண்ட களிப்பில் உழைத்த எருதையும் மறந்துவிட்டான். எருதுக்குத் தீனிபோட மறந்துவிட்டான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எருது ஒன்று மெல்ல அம்மா என்று கத்தியது.

மற்றொரு எருது அதைப் பார்த்துச் சிரித்தது. ஆவிற்கு நீர் என்று இரப்பினும்..என்று சிந்திக்கிறது-சிந்தனை வழியே சிரிப்புப் பிறக்கிறது. கத்திய காளை விளக்கம் தருகிறது. “தீனிக்காகக் கத்தவில்லை, நான் என் பசிக்காகக் கத்த வில்லை! இன்று வைக்கோலையாவது சிறிது தின்று வாழ்ந்தால்தானே அடுத்த ஆண்டும் நம் தலைவனுக்கு உழுது கொடுக்க முடியும்” என்றது. அத்தகு பண்பியல்வழி வாழும் காளைதான் கோயில் முகப்பில் படுத்துக் கிடக்கிறது. நீ கோயிலுக்குள் நுழையும்போது, “ஐயா! தேங்காய் இருக்கிறதா? பழம் இருக்கிறதா? சூடம் வெற்றிலைப் பாக்கு இருக்கிறதா? தமிழில் அருச்சனை செய்யப் போகிறாயா? இல்லை, வழக்கம்போல் வடமொழியில் அருச்சனை செய்யப் போகிறாயா? என்று அந்த எருது கேட்கவில்லை! ‘நீ