பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 


5


அருளியலும் அறிவியலும்


அறிவியற் கலை வட்டத்தில் வளர்கின்ற சமுதாயத்தில் சமயம் வளருமா என்பது போன்ற எண்ணங்கள்-ஐயங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று என்று கருதுகிறேன். அப்படி எழுகின்ற ஐயங்களைப் பார்த்து எனக்கு வருத்தமோ வேறு விதமான எண்ணங்களோ உருவாவதில்லை. காலத்தின் தேவை, காலத்தின் விளைவு இவைதாம். இந்த மாதிரியான் எண்ணக்குவியல்கள்! ஆனாலும், வளர்கின்ற விஞ்ஞான உலகம் என்றால் என்ன? சமயம் என்றால் என்ன? இவற்றைத் தனித்தனியே அதனதன் முழு அமைப்பு, அதனுடைய முழு இலட்சிய வடிவு இவைகளை யெல்லாம் தெளிவாகப் புரிந்து கொண்டேமானால், இந்தக் குழப்பமே ஏற்படாது என்று கருதுகிறவர்களிலே நானும் ஒருவன்.

எதிலுமே மேலெழுந்தவாரியாக ஏற்படுகிற அரை குறை எண்ணங்களும், அரைகுறை அறிவும் அரைகுறை அனுபவமும்தான், “இது தேவையா? அது தேவையா? என்ற போராட்ட எண்ணங்களை எழுப்பி விடுகின்றனவே தவிர, எங்கெங்கு பூரணம் இருக்கிறதோ அங்கெல்லாம் தேவை. தேவையில்லை என்ற பேச்சு எழுவதே கிடையாது. அறிவியல் ஆனாலும் சரி, அருளியல் ஆனாலும் சரி, எங்கெல்லாம்