பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பமிகுதிதான். ஒவ்வொன்றாகப் புதிய சாதனங்களைக் கண்டு பிடித்துக் கொண்டே போகின்றோம்.

நகல் எடுப்பது என்று சொன்னால் தவறில்லை. அந்த நகல் எடுக்கின்ற விருப்பத்திலே செடிகளில் பூத்துக் குலுங்கி மணம் தருகின்றனவாயிக்கின்ற மலர்களைப் பார்த்து நகல் எடுக்கின்றான் மனிதன். வண்ணத்தால், வடிவத்தால், தோற்றப் பொலிவால் நகல் எடுத்துவிட்டான். ஆனால் மணம் கொடுக்க முடியாமல் தோல்வி அடைந்து விட்டான். தேங்காய் போல, பலாப்பழம்போல, வாழைத்தாறுபோலக் களி மண்ணாலே வண்ணமாகச் செய்கின்ற காட்சிகளைப் பார்க்கிறோம். வண்ணத்திலே, தோற்றத்திலே, வடிவத்திலே எங்ஙனம் அது தேங்காய்போல, பலாப்பழம்போல, வாழைத் தாறுபோலத் தோற்றமளித்தாலும் அதற்குச் சுவை கொடுக்க முடியாமல் தோல்வியடைந்ததைப் பார்க்கின்றோம். அதை விட மிகச் சுவையாக-உங்களுக்கு நேரடியாகத் தெரிந்து ஒரு சான்று. நகரத்திலே துணிக்கடைகளின் முகப்பிலே தீபாவளி நெருங்க நெருங்க, நம்மைவிட அழகான சிலைகள் வியாபார விளம்பரத்திற்காக நிறுத்தப்பெறும். கொஞ்சங்கூடக் குறைவில்லாத் திருமேனிகள். நாம் விரும்பியபடி நம்முடைய அமைப்பு இல்லை. நாம் கருப்பாக இருக்கிறோமே என்று பலர் வருத்தப்பட்டும் கொள்ளுகின்றார்கள். உயரம் போதவில்லையே என்று சிலர் வருத்தப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் அந்த உருவங்கள் இருக்கின்றனவே, அவை அழகாக, ஒழுங்காக கச்சிதமாகத் தீட்டப் பெற்றிருக்கின்றன. ஆனாலும் உயிர் கொடுக்கப்பெறவில்லை. அதைத்தான் பிளேட்டோ சொல்லுகிறான். முடிக்கின்ற பொழுது, எங்கெல்லாம் மனிதன் மணம் கொடுக்க முடியாமல் தோல்வியுறுகின்றானோ, எங்கேயெல்லாம் மனிதன் சுவை கொடுக்க முடியாமல் தோல்வியடை கின்றானோ, எங்கேயெல்லாம் மனிதன் உயிர்த்தன்மை