பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

297


கொடுக்க முடியாமல் தோல்வியுறுகின்றானோ அங்கேயெல்லாம் இவற்றைக் கொடுக்கின்ற ஒரு பேருண்மையைப் பார்க்கிறோம்- பேராற்றலைப் பார்க்கின்றோம்-அழிவில்லாத சக்தியைப் பார்க்கின்றோம் என்கின்றான். ஆக, விஞ்ஞானி கூட மெய்ஞ்ஞானத் துறைக்குப் போகப் பயின்று கொண்டிருக்கின்றான், இயற்கைப் பூஞ்சோலையிலே வாழ்க்கை என்ற உலகத்திலே.

அறிவியலிலே அவன் புகுந்து, ஆழ்ந்த அனுபவங்களைக்கண்டு, ஆழ்கடலிலே குளித்து முத்தெடுத்தால் அந்த முத்தை அணியாக உபயோகப் படுத்துவதுதான் முறை. வாழ்க்கை என்ற அனுபவத்திலே-அறிவியல் கடலிலே ஆழக் குளித்து முத்தெடுப்பதுபோல, அறிவியல் உண்மைகளைக் காண்கின்றார்கள். அந்த அறிவியலை அணியாகவாழ்க்கைக்கு ஆபரணமாகக் கொண்டு, மேலும் உள்ள இலட்சியத்திற்குப் போகின்றார்களே தவிர, வாழ்வதுநிரந்தரமாக வாழ்வது- நிலைபேறாக வாழ்வது என்ற இலட்சியத்திற்குப் போவதில்லை.

எனவே, விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் என்ற இரண்டையும் பார்க்கின்றபொழுது நமக்கு அவை வேறுவேறாகத் தோன்றவில்லை. அதையே சிறந்த பேரறிஞர்களுள் ஓர் அறிஞன் சொல்லுகின்றான் “இரட்டைச் சகோதரிகள்” (Twin sisters) என்று. இரட்டைச் சகோதரிகளாகப் பிறக்கின்றன அருளியலும் அறிவியலும் இரண்டு சகோதரிகளுள் ஒருவரைக்கொருவர் வேற்றுமை கிடையாது என்று சொல்லுகின்றான். இரண்டு பேரும் மண்ணுக்கும் விண்ணுக்கும், விண்ணுக்கும் மண்ணுக்கும் இணைப்பூட்டுகின்றார்கள்-வலு ஊட்டுகிறார்கள்-உறவுண் டாக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லுகின்றான்.

மண்ணகத்திற்கும் விண்ணத்திற்கும் நிறைய வேற்றுமை இருக்கின்றது. விண்ணகம் இன்பப் பொலியுடையதாக