பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளமுடையதாக இருக்கின்றது. மண்ணகத்திற்கும் விண்ணகத்திற்கும் இணைப்புண்டாக்குகிறான். பாரதியும் அந்தக் கனவைக் கண்டான். “மண்ணகத்தை விண்ணகமாக்க வேண்டும்” என்று சொல்லுகின்றான். எனவே விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமுமாகச் சேர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் இணைப்புண்டாக்குகின்றன - உறவுண்டாக்குகின்றன. அப்படி உறவுண்டாக்குவதன் மூலமாக நமது நாட்டை நம்முடைய மக்களைச் செழுமைப் படுத்துகின்றன. உள்ளத்தால் செழுமைப் படுத்துகின்றன - பொருளால் செழுமைப் படுத்துகின்றன; உள்ளத்துச் செழுமை பொருட் செழுமையாக வரமுடியும். பொருட்செழுமையால் உள்ளத்துச் செழுமை மலரமுடியும். பொருளியல் செழுமைக்கும் உலகியல் செழுமைக்கும் விஞ்ஞானமும் துணையாக நின்று வளர்கிறது. எனவே இதனை “இரட்டைச் சகோதரிகள்” என்று தெளிவாகச் சொல்லுகின்றான்.

எப்படி வானவில்லிலே பல வண்ணங்கள் இருந்தாலும் கூட, அந்த வண்ணங்களிலே ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவு இருக்கிறதோ-நெருங்கிய பிணைப்பு இருக்கின்றதோ அதுபோல விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் ஆழமான அனுபவத்திலே நிறையப் பிணைப்பு இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிய வேண்டும். இதுவரை விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில், நாட்டு வழக்காயினும் சரி, உலக வழக்காயினும் சரி விஞ்ஞானி படைப்புக் கர்த்தாவாக வழக்குக் கிடையாது. கண்டுபிடித்தான், கண்டுபிடித்தான் என்றுதான் சொல்லுவார்கள். கண்டுபிடித்தல் என்று சொல்லுகின்றபொழுதே எங்கோ இருக்கின்ற ஒன்றை இயற்கையிலேயே உருவாக்கப்பட்டுப் படைப்பிலே அதிசயமாகப் பரந்து கிடக்கின்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது என்றுதான் சொல்லுவார்கள், கண்டு பிடித்தல் என்று சொல்லுகின்றபொழுதே எங்கோ இருக்